ரஜினி பட பாட்டை ஆட்டைய போட்ட ஏ.ஆர்.முருகதாஸ்!.. எஸ்.கே 23 பட தலைப்பு இதுதானாம்!..

தீனா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். துவக்கம் முதலே தன்னை ஒரு ஆக்‌ஷன் பட இயக்குனராக காட்டிக்கொண்டார். அடுத்து விஜயகாந்தை வைத்து அவர் எடுத்த ரமணா திரைப்படம் அவரின் இமேஜை இன்னும் மேலே உயர்த்தியது.

எனவே, முன்னணி நடிகர்கள் அவரின் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டனர். சூர்யாவை வைத்து கஜினி படத்தை இயக்கினார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த படம் சூப்பர் ஹிட். ஒருபக்கம் தெலுங்கு சினிமா பக்கமும் போய் அங்குள்ள பெரிய ஹீரோக்களை வைத்து படமெடுத்தார். சிரஞ்சீவியை வைத்து ஸ்டாலின் எனும் படத்தை எடுத்தார்.

இதையும் படிங்க: சொன்னதும் அஜித்தும் விஜய் சேதுபதியும் ஓடி வந்தாங்க.. அந்த மனசுதான் சார் கடவுள்! பிரபலம் சொன்ன சீக்ரெட்

ஹிந்திக்கு போய் சல்மான்கானை வைத்து கஜினியை ரீமேக் செய்தார். இப்படி இந்திய அளவில் முக்கிய இயக்குனராக மாறினார் ஏ.ஆர்.முருகதாஸ். விஜயை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் எனும் 3 வெற்றிப்படங்களை கொடுத்தார். ஆனால், மகேஷ்பாபுவை வைத்து இயக்கிய ஸ்பைடர், ரஜினியை வைத்து இயக்கிய தர்பார் ஆகிய படங்கள் ரசிகர்களை கவரவில்லை.

அதோடு, விஜயை இயக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைக்காமல் போனது. எனவே, கடந்த 3 வருடங்களாக அவர் எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை. ஹாலிவுட் பட பாணியில் ஒரு கார்ட்டூன் படத்தை எடுக்கவும் அவர் முயற்சி செய்ததாக செய்திகள் வெளியானது.

sk23

அதன்பின் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை துவங்கினார் முருகதாஸ். இது சிவகார்த்திகேயனின் 23வது திரைப்படமாகும். இதுவும் ஒரு பக்கா ஆக்‌ஷன் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு ‘சிங்க நடை’ என தலைப்பு வைக்கலாம் என யோசித்து வருகிறாராம் முருகதாஸ்.

படையப்பா படத்தில் இடம் பெற்ற ‘சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு’ பாடலில் இருந்து இந்த தலைப்பை அவர் சுட்டிருப்பதாக கருதப்படுகிறது. ஏற்கனவே சிங்கப் பாதை என்கிற தலைப்பில் சிவகார்த்திகேயனின் படம் ஒன்று துவங்கப்பட்டு பின்னர் டிராப் ஆகிவிட்டது. எனவே, இந்த படம் மூலம் தனது பட தலைப்பில் சிங்கம் வந்தது எஸ்.கே.வுக்கு மகிழ்ச்சி என சொல்லப்படுகிறது.

 

Related Articles

Next Story