60 மற்றும் 70களில் தமிழ் சினிமாவின் சகாப்தத்தை மாற்றியமைத்தவர் எம்ஜிஆர். அதுவரையில் வந்து கொண்டிருந்த திரைப்படங்களை விட முற்றிலும் மாறுபட்ட கதைகளை தேர்வு செய்து நடிப்பார். குறிப்பாக தாய் பாசம் மற்றும் சண்டைக் காட்சிகள் இவரின் தனி அடையாளம் ஆகும். அதனாலயே எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் சிறியோர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பு மக்களையும் கவரும் தன்மையுடன் அமைந்தது.
இதுவே பின்னாலே அரசிலும் ஜொலிக்க உதவியாய் இருந்தது. பொது மக்களிடம் எப்போதும் அன்பாகவே இருப்பார். பொதுவெளியில் எம்.ஜி.ஆர் எப்படி நடந்து கொள்வார் என்பது எல்லோரும் அறிந்ததே.. பொது மக்களிடம் எப்போதும் அன்பாக பேசுபவர் சக நடிகர்களிடம் பேசவே மாட்டார் என்று சிலர் குறை கூறுவார்கள்.
ஆனால் எம்.ஜி.ஆரின் நெருக்கமான நண்பர்கள் எம்.ஜி.ஆர் ஒரு ஜாலியான கேரக்டர் என்றும் கூட வேலை பார்க்கும் அனைவரிடமும் சகஜமாக பழகக் கூடியவர் என்றும் கூறுவார்கள். இதைப்பற்றி திரைப்படங்களில் நடிக்கும் போது படப்பிடிப்பு தளத்தில் சக நடிகர்களுடன் இப்படித்தான் நடந்து கொள்வார் என்று இவருடன் நடித்த நடிகை ராஜஸ்ரீ கூறியுள்ளார்.
நடிகை ராஜஸ்ரீ தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,ஹிந்திபோன்ற மொழிகளின் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். தெலுங்கில் என்.டி.ராமராவ்,காந்தாராவ் ஆகிருடன் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் காதலிக்க நேரமில்லை,நீயும் நானும்,பாமா விஜயம் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவர் எம்.ஜி.ஆர் உடன் ”அடிமைப்பெண்” என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது ராஜஸ்ரீ திருப்பதிக்கு சென்று வந்து அனைவருக்கும் லட்டு கொடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது எம்.ஜி.ஆர் ”அனைவருக்கும் லட்டு கொடுக்கிறீர்களே எனக்கு ஏன் தரவில்லை” என்று கேட்டார்.
அதற்கு ராஜஸ்ரீ ”உங்களுக்கு லட்டு பிடிக்குமா..? மேலும் இது கோவில் பிரசாதம் உங்களுக்கு பிடிக்குமா என்று தெரியவில்லை என்று பதில்லலித்தார். எம்.ஜி.ஆர் ”எனக்கும் லட்டு பிடிக்கும் ”என்று உரிமையோடு எடுத்து சாப்பிட்டாராம். இது எம்.ஜி.ஆர் அனைவரிடமும் சகஜமாக பழக்குவார் என்பதை எடுத்துரைக்கிறது. மேலும் சம்பவத்தை பற்றி பேட்டி ஒன்றில் ராஜஸ்ரீ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…