Categories: Cinema News latest news

இதனால்தான் விசில் போடு பாடலில் அஜ்மல் ஆடவில்லையா? சரியான வெவரம் தாங்கோ!

GoatMovie: விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோட் திரைப்படத்தில் இன்ட்ரோ பாடலான விசில் போடு பாடல் குறித்து அப்படத்தில் நடித்த நடிகர் அஜ்மல் தெரிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இத்திரைப்படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, அஜ்மல், பிரசாந்த், லைலா, சினேகா உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இதையும் படிங்க: விஜயுக்கு அண்ணியா கேட்டப்ப நோ சொன்ன பிரபல நடிகை… ஆனா பின்னாடி நடந்து செம பிளான்…

இப்படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருக்கிறார். விஜய் அப்பா மற்றும் மகன் என இரு வேடங்களில் நடித்திருக்கிறார். இப்படத்தில் வில்லனாக மைக் மோகன் நடித்திருந்தாலும் அவருக்கு முக்கிய ரோல் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே படத்தில் முக்கிய கேரக்டரில் முன்னணி பிரபலங்கள் நடித்தாலும் படத்தில் கேமியோ அவதாரங்கள் அதிகம். அந்த வகையில் ஒற்றை பாடலுக்கு நடிகர் ஆட்டம் போட கிளைமேக்ஸ் காட்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் எண்ட்ரி கொடுத்திருந்தார்.

GOAT

படத்தின் திரைக்கதை சரியான வகையில் அமைக்கப்பட்டு இருந்தாலும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய அளவில் தொய்வை தான் ஏற்படுத்தி இருந்தது. பாடல்களும் விஜய் படத்தில் மிகப்பெரிய ஹிட்டை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் சரியான அளவு வரவேற்பை பெறவில்லை.

இதையும் படிங்க: கோட் படத்தில் எஸ்.கே, ஜீவன் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது இவங்கதானா? நல்லா இருக்கே!

இதில் முதல் சிங்கிளாக வெளியான விசில் போடு பாடல் மட்டும் விதிவிலக்கு என கூறலாம். ஓரளவு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் இப்பாடல் இறுதியில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்ட மூவரும் ஆட்டத்தில் தெறிக்க விட்டிருப்பார்கள்.

ஆனால் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த அஜ்மல் மட்டும் சரியாக ஆடத்தெரியாத போல் ஒரு சீன் வந்திருப்பார். இதுகுறித்து அவர் தன்னுடைய பேட்டியில் கூறும்போது, ரைட்ல விஜய் சார், லெப்ட்ல பிரபுதேவா மாஸ்டர், அந்த பக்கம் பிரசாந்த் சார் என மூவருமே நடனத்தில் பட்டையை கிளப்பினர்.

இதனால் நான் ராஜசுந்தரம் மாஸ்டரிடம் போய் எல்லா பிரண்ட் கேங்குளையும் ஆடத் தெரியாமல் ஒருத்தன் இருப்பானே. நான் அவன மாதிரி இருந்துட்டு போகவா என கேட்டேன். ஆனால் மாஸ்டர் கண்டிப்பாக ஆடவேண்டும் என கூறிவிட்டார். பின்னர் நான் ஓரளவு கெஞ்சி கேட்ட பின்னரே எனக்கு சின்ன சின்ன ஸ்டெப்களை கொடுத்து சரி செய்தார் எனவும் தெரிவித்திருக்கிறார்.

Published by
Akhilan