தமிழ் டிரெய்லரில் இருந்ததை இந்தியில் மாற்றியதுக்கு காரணம் இதான்… கோட்டில் இதை கவனிச்சீங்களா?
Vijay: விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் கோட் திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இதை தொடர்ந்து தற்போது இணையத்தின் பேசுபொருளாகி இருக்கிறது. இந்த டிரெய்லரில் நிறைய ஆச்சரிய விஷயங்கள் அடங்கி இருக்கிறது.
இந்த டிரெய்லர் வெளியான நிலையில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு கொடுத்த பதில்களும் தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: பா.ரஞ்சித்துக்கு வரலாறு தெரியுமா? தெரியாதா? தங்கலானை இப்படியா எடுப்பாரு…!
பொதுவாக ஒரு பேன் இந்தியா படமாக வெளியிடப்படும் போது டிரெய்லரில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால் கோட் படத்தில் தமிழ் டிரெயிலரில் இருந்த கில்லி படத்தின் முருகன் பாடல் காட்சிகள் இந்தி மற்றும் தெலுங்கு டிரெய்லரில் இடம்பெறவில்லை அதற்கு பதிலாக விஜயின் இன்னொரு காட்சி இருந்தது.
இதுகுறித்து கேட்ட போது, கில்லி படக்காட்சிகள் தமிழ் ரசிகர்களுக்கு தான் பிரபலமாக இருக்கும். அதனால் தான் தமிழ் டிரெய்லரில் வைத்துவிட்டோம். தெலுங்கு மற்றும் இந்தி டிரெய்லரில் மிஸ்ஸன் இம்பாஷிபில் படத்தின் சீனை காமெடிக்காக வைத்தோம்.
இதையும் படிங்க: ‘கோட்’ டிரெய்லரால் வெறியான மகிழ்திருமேனி! ‘விடாமுயற்சி’யில் அப்போ வெறித்தனம் இருக்கு
எனக்கும் அப்படம் ரொம்பவே பிடிக்கும். ஆனால், இப்படத்திற்கும், அப்படத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். கோட் டிரெய்லர் செம வரவேற்பு கிடைத்து இருக்கும் நிலையில் செப்டம்பர் 5ந் தேதி படம் ரிலீஸாக இருப்பதால் விஜய் ரசிகர்கள் செம எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.