இதனால்தான் இந்தியன்2ல் நடிக்கவில்லை… விஜய் டிவி ரக்‌ஷன் பொடணியில் போட்ட ஆர்.ஜே.பாலாஜி!..

Published on: November 19, 2024
rjbalaji
---Advertisement---

RJ Balaji: நடிகர் ஆர்.ஜே பாலாஜி சமீபத்தில் கொடுத்திருக்கும் பேட்டியில் இந்தியன் அவர் நடிக்க மறுப்பதற்கான காரணம் குறித்து பேசி இருக்கும் விஷயம் ரசிகர்களிடம் அப்ளாஸை அள்ளி இருக்கிறது.

லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் இந்தியன் 2. இப்படம் ரிலீசுக்கு முன்னர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்திருந்தது.

இதையும் படிங்க: ஞானவேலுக்கு 100 கோடி.. சூர்யாவுக்கு எத்தன கோடி தெரியுமா? ‘கங்குவா’ கொடுத்த பெரிய லாஸ்

ஆனால் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களின் அதிக அளவு ரசிகர்களிடம் விமர்சனத்தை குவித்ததும் இந்தியன்2 தான். முதல் பாகம் வெளியான காலகட்டத்தில் வசூல் சாதனை படைத்த நிலையில் இரண்டாவது பாகம் ட்ரோல்களில் தான் சாதனை படைத்தது.

இந்த நிலையில் இப்படத்தில் சித்தார்த் உள்ளிட்ட நால்வர் நண்பர்களாக இருப்பார்கள். அதில் கேரக்டரில் நடிகர் ஆர்.ஜே பாலாஜி நடிக்க இருந்ததாக தகவல்கள் கசிந்தது. அது குறித்து தற்போது அவரிடம் கேட்டபோது, 2015 ஆம் ஆண்டு எனக்கு இந்தியன்2 வாய்ப்பு வந்தது உண்மைதான்.

சங்கர் சார் படத்தில் நடிக்க இருப்பது எனக்கும் சந்தோஷமாக இருந்தது. ஆனால் அப்படம் அந்த சமயத்தில் தள்ளிப்போனது. நானும் அதற்குள் எல்கேஜி திரைப்படத்தை வெளியிட்டு விட்டேன். அதை தொடர்ந்து கமல்ஹாசன், சித்தார்த், எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட பெரிய நடிகர்களுக்கு மத்தியில் எனக்கு என்ன ரோல் இருந்து விடப்போகிறது என சந்தேகம் எனக்கு வந்தது.

இதையும் படிங்க: விஷாலுக்கு மகள் மாதிரி அன்பைக் கொடுத்தேன்… வேற மாதிரி பண்ணிட்டானே… புலம்பிய மிஷ்கின்

இதை பார்த்த ரசிகர்கள் இரண்டு தயாரிப்பாளர்கள் கொடுத்த அட்வான்ஸ் வேட்டையன் படத்தில் வந்த ஒரே சீனுக்காக தொகுப்பாளர்கள் திருப்பிக் கொடுத்ததாக பேசி இருந்தார். அதை, இதை ஒப்பிட்டு கலாய்த்து வருகின்றனர்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.