இதுனாலதான் பூர்ணிமாகிட்ட சரியா பேசல! உண்மையை போட்டுடைத்த ‘பார்க்கிங்’ நடிகை இந்துஜா
Actess Indhuja: பிகில் போன்ற ஒரு சில படங்களில் துணை நடிகையாக இருந்து சமீபத்தில் பார்க்கிங் படத்தின் மூலம் ஹீரோயினாக மாறியவர் தான் நடிகை இந்துஜா. பார்க்கிங் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில்பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
சமீபகாலமாக குறைந்த பட்ஜெட்டில் நல்ல கதையுள்ள படங்களை மக்கள் வரவேற்க ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் ஹரீஸ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் பார்க்கிங். நம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து எடுக்கப்பட்ட படமாக இது அமைந்தது.
இதையும் படிங்க: வடிவேல் எவ்ளோ கேவமலமானவர் தெரியுமா?!.. புட்டு புட்டு வைக்கும் காமெடி நடிகர்..
இந்த பட ப்ரோமோஷனுக்காக படக்குழு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார்கள். குறிப்பாக ஹரீஸ் கல்யாண் மற்றும் இந்துஜா ஆகிய இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார்கள்.இதில் பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமாகியிருக்கிறார் பூர்ணிமா.
அவரும் நடிகை இந்துஜாவும் கல்லூரி தோழிகளாம். ஆனால் வீட்டிற்குள் வந்ததும் இந்துஜா அனைவரிடமும் சகஜமாக பேச பூர்ணிமாவுடன் மட்டும் சரியாக பேசவில்லை. இதை பற்றி பூர்ணிமாவே வீட்டிற்குள் சொல்லி வருத்தப்பட்டிருப்பார்.
இதையும் படிங்க: இனிதே நடந்து முடிந்த ரெடின் கிங்ஸ்லி திருமணம்! இந்த நடிகைதான் மனைவியா? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த புகைப்படம்
இந்த நிலையில் பார்க்கிங் வெற்றிவிழாவில் இதுகுறித்து இந்துஜாவிடம் கேட்கப்பட்டது. அப்போது கூறிய இந்துஜா பட ப்ரோமோஷனுக்காக தான் போனோம் என்றும் எங்களுக்கு பல விதிமுறைகளை சொல்லித்தான் உள்ளே அனுப்பினார்கள் என்றும் கூறினார்.
அதுமட்டுமில்லாமல் யாரும் யாருக்கும் ஃபேவரைட் காட்டாதீர்கள் என வீட்டிற்குள்ளே நான் சொல்லியிருப்பேன். நானும் பூர்ணிமாவும் கல்லூரி தோழிகள். பொதுவாகவே இரண்டு வருடங்களுக்கு ஒருமுறைதான் நாங்கள் பேசிக் கொள்வோம். மற்ற படி பூர்ணிமா ஒரு இனிமையான பெண்.
இதையும் படிங்க: புல்லாங்குழல் கலைஞர் பாடகரான சுவாரசியம்… மனதை மயக்கிய அருண்மொழி!..
நன்றாக விளையாடி வருகிறார். ஒரு சில விஷயங்களை தவிர்த்தால் இன்னும் பெரிய அளவில் வருவார் என இந்துஜா கூறினார்.