சார்பட்டா பரம்பரைக்கு பிளான் பண்ணி தேசிய விருது தாராம தடுத்தாங்க!.. விளாசிய பா.ரஞ்சித்..
Paranjith: இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் போட்டியில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், அது நடக்காமல் போனது. இதை தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து பா.ரஞ்சித் தெரிவித்திருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர் இயக்குனர் பா ரஞ்சித். முதல் படமே அவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுக்க அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் குவிந்தது. ரஜினிகாந்த் உடன் மட்டுமே இரண்டு படங்களில் இணைந்தார். இதில் கபாலி படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது.
இதையும் படிங்க: கோட் படத்தில் குட்டி விஜய் இந்த பிரபலத்தின் மகனா? விஜய் என்ன கேட்டார் தெரியுமா?
ஆனால் இவர் இயக்கத்தில் வெளியான காலா திரைப்படம் தோல்வி படமாகவே அமைந்தது. சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான தங்கலான் திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இது குறித்தான பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பா ரஞ்சித் தன்னுடைய படங்களை குறித்து பல புதிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் காலா திரைப்படம் பலரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆனால் அப்படம் ஒதுக்க வேண்டிய படம் இல்லை. அதில் கொண்டாடப்பட வேண்டிய விஷயங்கள் நிறைய இருந்தது. இருந்தும் என் படம் என்பதால் அப்படத்தை பலர் நிராகரித்தனர் என ஓப்பனாகவே பேசி இருப்பார்.
இதையும் படிங்க: நீங்க தங்கம் சார்… ரஜினிகாந்த் குறித்து அந்த ஸ்டாரே இப்படி சொல்லிட்டாரே…
இது மட்டுமல்லாமல் ஆர்யா நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருது லிஸ்டில் இப்படம் இடம்பெறவில்லை. இது குறித்து பேசிய பா.ரஞ்சித், சார்பட்டா பரம்பரை திரைப்படம் பலருக்கு பிடித்திருந்தது.
இருந்தும் ஒரு சிலருக்கு இரண்டாம் பகுதி திருப்திகரமாக இல்லை. இதை தொடர்ந்து அப்படம் பல திரைப்பட விழாக்களில் நேரடியாக நிராகரிக்கப்பட்டது. தேசிய விருது வாங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போட்டிக்குள்ளே செல்லாமல் அப்படத்தை நிராகரித்தனர். இது பலரின் திட்டமிட்ட செயல்தான். என் படம் என்பதால் தான் அதை அவர்கள் வேண்டாம் என்றனர். இதற்கான காரணம் எனக்கு நன்றாகவே தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.