ஓ! இதான் இப்படத்தில் டாப்ஸிக்கு அப்புடி நெருக்கமாக காட்சி இல்லையா? பாவம் தானுங்க!..

Taapsee: ஆடுகளம் ஐரீனை தமிழ் சினிமா ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள். மதுரையில் வசிக்கும் ஆங்கிலோ இந்தியன் பெண் கேரக்டராகவே அந்தப் படத்தில் டாப்ஸி வாழ்ந்திருப்பார். இன்னும் சொல்லப்போனால், டெல்லி சாப்ட்வேர் இன்ஜினீயரான டாப்ஸி, முதன்முதலாக நடிக்க ஒப்பந்தம் ஆன படம் ஆடுகளம்தான். ஆனால், ஜும்மாண்டி நாடன் எனும் தெலுங்குப் படம் ஆடுகளத்துக்கு முன்னரே ரிலீஸானது.

பள்ளி, கல்லூரி நாட்களிலேயே மாடலிங் மீது ஆர்வம் கொண்டிருந்த டாப்ஸி, பல இடங்களில் வாய்ப்புக் கேட்டு தனது புகைப்படங்களை அனுப்பியிருந்தார். அப்படி ஒரு ஒருங்கிணைப்பாளர் வழியாகவே இயக்குநர் வெற்றிமாறனுக்கு டாப்ஸியின் புகைப்படம் கிடைத்திருக்கிறது. ஆடுகளம் படம் தொடங்கும்போது முதன்முதலில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் ஸ்ரேயா.

இதையும் படிங்க: ரெடியா மாமே!.. போலீஸ் கெட்டப்பில் ரஜினி!.. அட ரிலீஸ் தேதியும் சொல்லிட்டாங்களே!….

கால்ஷீட் ஒதுக்க முடியாத சூழலில் அவரும் படத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை. அதன்பிறகு திரிஷா உள்ளே வர, அவரை வைத்து ஷூட்டிங்கை ஆரம்பத்திருந்தார் வெற்றிமாறன். ஆனால், பல்வேறு காரணங்களால் ஷூட்டிங் தாமதமாகியிருக்கிறது. அதேநேரத்தில், கௌதம் மேனன் - சிம்பு கூட்டணியில் உருவான விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு திரிஷா கால்ஷீட் கொடுத்திருந்தார்.

இதனால், அவரும் ஐரீன் கேரக்டரில் நடிக்க முடியாமல் போயிருக்கிறது. இதையடுத்தே ஐரீனாக டாப்ஸி நடிக்க முடிவாகியிருக்கிறது. ஐரீன் கேரக்டரில் நடித்த டாப்ஸிக்கு ஆடுகளம் படம் மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது. படம் ரிலீஸானபோது டெல்லிவாசியான அவரது தந்தை ஆர்கே புரத்தில் படத்தைத் திரையிடுவதாகக் கேள்விப்பட்டு போயிருக்கிறார்.

சப் டைட்டிலுடன் படம் ரிலீஸ் சேதி தெரிந்து அவர் படம் பார்க்க சென்றிருக்கிறார். அவரைப் பார்த்து படம் திரையிட்ட குழுவினர் ஆரம்பத்தில் ஆச்சர்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்தான் டாப்ஸியின் தந்தை என்று தெரிந்ததும் அவருக்கு நல்ல வரவேற்புக் கொடுத்ததோடு, இளைஞர் ஒருவர் அவரை ஆரத்தழுவி கண்ணீர்விட்டாராம். அதைப் பார்த்து டாப்ஸியின் தந்தை நெகிழ்ந்துவிட்டாராம்.

இதையும் படிங்க: தளபதியோட வம்புக்கே நிக்கிறீங்களே தலைவா… செப்டம்பரில் இப்படி ஒரு ஸ்கெட்ச்சா?

இதனால், வசன உச்சரிப்பு டாப்ஸிக்கு ஆரம்பத்தில் கைகூடாமல் போயிருக்கிறது. இதைப்பற்றி டாப்ஸி வெற்றிமாறனிடமும் சொல்லியிருக்கிறார். ஒரு கட்டத்தில், 'இரவில்தானே ஷூட் செய்கிறோம். அவங்க பேசிட்டே வரட்டும். லாங்ல லிப் சிங் தெரியாதுல’ என இயக்குநர் வெற்றிமாறன் சொல்லிவிட்டாராம்.

Related Articles
Next Story
Share it