Cinema News
ஜெயிலர் படத்தில் விஜய் சேதுபதியா?!.. நடிக்காமல் போனதற்கு காரணம் நெல்சனா!.. இது எப்ப?!..
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி வெளியானது. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதற்கு முன்னர் வெளியான பேட்டை படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்திருப்பார். அதே போல விக்ரம், விக்ரம வேதா, மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல், இந்தியிலும், தெலுங்கிலும் கூட பல படங்களில் அவர் வில்லனாக நடித்து வருகிறார்.
இதையும் படிங்க- பாக்ஸ் ஆபிஸ் கிங் நான்தான்!.. சைலைண்டா நிரூபித்த ரஜினி!… ஜெயிலர் 4 நாள் வசூல் இத்தனை கோடியா?!…
இந்நிலையில் ஜெயிலர் படத்தில் ஏன் விஜய் சேதுபதியை வில்லனாக போடவில்லை என்று தயாரிப்பாளர் ராஜன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவத்துள்ளார். விஜய் சேதுபதி ஒரு மிரட்டலான வில்லன் தான். பல படங்களில் அவர் வில்லனாக நடித்துள்ளார். ஆனால் நெல்சன் போட்ட கணக்கு வேற.
அவர் தமிழ்நாட்டில் மட்டுமின்றி எல்லா மாநிலங்களிலும் படம் ஓடவேண்டும் என்று நினைத்தார். அதனால் தான், மலையாள நடிகர் மோகன்லால், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்ட பலரை இந்த படத்தில் நடிக்கவைத்திருந்தார்.
வில்லனாக விஜய் சேதுபதியை போட்டிருந்தால், தமிழ்நாட்டில் இன்னும் கொஞ்சம் வரவேற்பு கிடைத்திருக்கும் தான். ஆனால் நெல்சன் இந்த படத்தை நாடு முழுவதும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று திட்டிமிட்டுள்ளார். அதேபோல, மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார் போன்ற முன்னணி நடிகர்கள் ரஜினிக்காக தான் இந்த படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டனர்.
சன் பிக்சர்ஸ் போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனத்தால் தான் இதையெல்லாம் சாத்தியமாக்க முடியும். மற்ற மாநில முன்னணி நடிகர்கள் நடித்ததால், அங்கும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்தது என்று தயாரிப்பாளர் கே.ராஜன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க- தலைவரு நிரந்தரம்!.. நிரூபித்த ரஜினி!.. ஜெயிலர் 3 நாள் மொத்த வசூல் இத்தனை கோடியா?!…