நான் கைதட்டல் வாங்க அவங்க கஷ்டப்படணுமா? விஜயகாந்த் திடீர் முடிவெடுக்க காரணம் இதான்!...

கேப்டன் விஜயகாந்த், தனது சினிமா பயணத்தில் 54 புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்தியவர். அடிமட்ட தொழிலாளிக்கும் படப்பிடிப்பு தளத்தில் தரமான உணவு கிடைக்க காரணமானவர். இப்படி பல பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அதில் முக்கியமானது சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் இருப்பது. இதற்குப் பின்னணியில் ஒரு சம்பவம் இருக்கிறது.

இதையும் படிங்க: தனுஷ் நடித்த படம் என் படத்தின் ஸ்கிரிப்ட்தான்! எல்லாத்துக்கும் இவர்தான் இன்ஸ்பிரேஷனா இருப்பார் போல

1979-ல் சினிமாவில் அறிமுகாமான விஜயகாந்த் முதல் 5 ஆண்டுகளிலேயே தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைத் தமிழ்நாட்டில் உருவாக்கினார். கமல் - ரஜினி என இருபெரும் ஜாம்பவான்கள் தமிழ் சினிமாவில் கோலோச்சிய காலகட்டத்திலேயே விஜயகாந்த் என்கிற நடிகனுக்கும் தனி மதிப்பு இருந்தது.

குறிப்பாக, 1984-ம் ஆண்டு அவரின் சினிமா பயணத்தில் முக்கியமான ஆண்டு. அந்த ஓராண்டில் மட்டும் விஜயகாந்த் நடிப்பில் 18 படங்கள் வெளியாகின. கோலிவுட்டில் மிகச்சில நடிகர்களுக்கே இருக்கும் சாதனை அது. விஜயகாந்தின் படங்களில் சண்டைக் காட்சிகள் பரவலான பாராட்டுகளைப் பெற்றதோடு, பரபரப்பாகவும் பேசப்படும்.

அதற்குக் காரணம் அவை உண்மைக்கு நெருக்கமாக ஷூட் செய்யப்படுவதே. இன்னொரு முக்கியமான காரணம், எப்படிப்பட்ட ரிஸ்கான சண்டைக்காட்சியாகவே இருந்தாலும் அதில் சண்டைக் கலைஞர்களைக் கொண்டு டூப் போடாமல் விஜயகாந்தே நடித்திருப்பது. ஆரம்பத்தில் சில படங்களில் மட்டுமே விஜயகாந்துக்கு சண்டைக் காட்சிகளில் டூப் போட்டிருக்கிறார்கள்.

அதன்பின்னர், அவரே முன்வந்து அந்த சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறார். அதற்குப் பின்னணியில் ஒரு துயரமான சம்பவமும் உண்டு. 1984-ல் 'நாளை உனது நாள்’ படத்தில் விஜயகாந்துக்கு டூப் போட்ட ரவி என்கிற ஸ்டண்ட் நடிகர் ஷூட்டிங் விபத்தில் காலமானார். படத்தின் டைட்டில் கார்டில் அவருக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அன்றிலிருந்து தனக்கு வேறு யாரையும் டூப் போட வைக்கக்கூடாது என்கிற முடிவையும் விஜயகாந்த் எடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க: விஜய் ரசிகர்களுக்கு வருத்தமான செய்திதான்… தளபதி69 ஷூட்டிங் எப்போ தெரியுமா?

Related Articles
Next Story
Share it