அனிருத்தை ஹீரோவாக்கிய கதை தான் டாடா… ஆனா நடந்தது… இயக்குனர் சொன்ன சீக்ரெட்..

Dada: பிக்பாஸ் கொடுத்த வெற்றியை விட கவின் நடிப்பில் வெளியான டாடா படத்தின் ஹிட் தான் அவரின் கேரியரையே வெகுவாக தூக்கிவிட்டது. ஆனா அந்த கதையை அனிருத்துக்காக இயக்குனர் உருவாக்கியதாகவும், அதன் பின்னர் நடந்த சிலவற்றையும் தன்னுடைய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.
கவின் சின்னத்திரையில் பிரபலமான கனா காணும் காலங்கள் சீரியலில் சின்ன ரோல் செய்து எண்ட்ரி கொடுத்தவர். அதை தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீரியலில் நடிக்க அவருக்கென ஒரு கூட்டம் உருவானது. சில படங்களில் நடித்தாலும் பெரிய ஹிட்டை அவரால் கொடுக்க முடியவில்லை.
இதையும் படிங்க: ஏங்கப்பா… இந்த ரோகினி பிரச்னையை மாட்டிவிட மாட்டிங்களா!… மீனாக்கு தான் மீண்டும் பிரச்னையா?
ஆனால் பிக்பாஸ் தமிழ் சீசன் 3ன் பாய்ஸ் டீமை யாராலும் மறக்கவே முடியாது. பெரிய வரவேற்பை பெற்ற கவினுக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் கப்பை அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் சத்தமே இல்லாமல் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினார். இருந்தும் அவருக்கு ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவிந்தது.
இதை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான டாடா படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. ஆனால் அந்த கதையை இயக்குனர் கணேஷ் முதலில் இயக்கியது அனிருத்துக்கு தானாம். அதாவது அனிருத் வயதில் ஒரு பையன் குழந்தையை வைத்து கொண்டு இருந்தால் எப்படி இருக்கும்? இதனை யோசித்தே டாடா படத்தினை உருவாக்கி இருக்கிறார்.
அனிருத் மாதிரி ஒருவர் இருந்தால் அது விஷுவலா ஆர்வத்தினை கிளப்பும். அதன் பின்னரே கவினை வைத்து இந்த படத்தினை உருவாக்க முடிவெடுத்தாராம். இருந்தும், அந்த பையனை பில்டப் செய்ய புது ஆட்கள் தான் வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். ஆனால் எக்ஸிக்யூட்டிவ் புரோடியூசர் தான் கவினுடன் சில அனுபவ ஆட்களை வைக்க வேண்டும். அப்போ தான் படம் விற்பனை செய்ய முடியும் எனக் கூறினாராம்.
இதையும் படிங்க: எழுதும்போது தப்பாச்சி.. அதுவே அவருக்கு பேர் ஆச்சி!.. கவுண்டமணி பெயர் வர காரணமாக இருந்த பாக்கியராஜ்..
அதனால் தான் பாக்கியராஜ், விடிவி கணேஷை செலவு செய்து கூட்டிட்டு வரணுமா? அவர்களுக்கு பெரிய சீன் இல்லையே என்றேன். ஆனால் தயாரிப்பாளர் தைரியமாக செய் என நம்பிக்கை கொடுத்தார். அதன் பின்னரே அவர்களை படத்துக்குள் கொண்டுவந்தேன். சில டயலாக் நான் எழுதியது வேறு, அவர்கள் கொஞ்சம் பேசி சில மாற்றங்களை செய்ய ஒப்புக்கொண்டேன் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.