Cinema News
என் அப்பாவுக்காக தான் இந்த படம்… ஸ்டார் இயக்குனர் சொன்ன சீக்ரெட்… இவரை மறக்க முடியுமா?
Star Movie: சினிமாவில் நடிப்பது என்னவோ சாதாரண விஷயமில்லை. ஒரு வாய்ப்பு கிடைத்து மேலே ஏற நிறைய கலைஞர்கள் இன்றளவும் கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கின்றனர். அப்படி ஒரு நடிகரான தன் தந்தைக்கு சமர்ப்பணமாக படம் ஒன்றை எடுத்திருக்கிறார் ஸ்டார் இயக்குனர்.
வாரிசு இயக்குனர்கள் என்றால் அது பெரிய பிரபலங்களின் பிள்ளையாக தான் இருக்கும் என்ற கோட்பாட்டை உடைத்து இருக்கிறார் ஸ்டார் இயக்குனர் இளன். யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடிப்பில் உருவானது பியார் பிரேமா காதல் திரைப்படம். இப்படத்தினை இயக்கியவர் இளன்.
இதையும் படிங்க: குழந்தைகளை வளர்ப்பதில் இவ்ளோ விஷயங்கள் இருக்கா? டிப்ஸ்களை அள்ளி வீசிய சின்னக் கலைவாரணர்!..
முதன்முதலில் குறும்பட இயக்குனராக தனது கல்லூரியின் முதல் வருடத்திலே முடிவு செய்துவிட்டாராம். பின்னர் இரண்டாம் ஆண்டில் திரைப்பட இயக்குனராக முடிவெடுத்து அதற்கு தயாராகிவிட்டாராம். அந்த முடிவை தன்னுடைய குடும்பத்திடம் சொல்லி அதற்கு ஒப்புக்கொள்ள வைத்து விடுகிறார்.
முதல் படம் பெரிய அளவில் ஹிட்டடிக்காத நிலையில் கவின் நடிப்பில் ஸ்டார் படத்தினை இயக்கி இருக்கிறார். இப்படத்தின் ட்ரைலர் பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. நடிக்க ஆசைப்பட்டு அதில் கஷ்டப்படும் இளைஞனின் கதையாக இருக்கும் என்கின்றனர். இந்நிலையில், இயக்குனர் இளன் ஸ்டார் படம் தன்னுடைய தந்தைக்கு சமர்ப்பணம் எனக் கூறுகிறார்.
இதையும் படிங்க: தாமரையை மலர வைக்கும் முயற்சியா இது? தயாராகப் போகும் அண்ணாமலை பயோபிக்.. ஹீரோ யார் தெரியுமா?
நடிகராக ஆசைப்பட்டு இன்று வரை புகைப்பட கலைஞராக இருப்பவர். 55 வயதில் தான் அவருக்கு முதல் வாய்ப்பே கிடைத்தது எனவும் குறிப்பிட்டார். அவர் ராஜா ராணி படத்தில் ஜெய்யின் தந்தையாக நடித்த பாண்டியன் எனத் தகவல்கள் தெரிவிக்கிறது. ஜெய் பீம் படத்திலும், பியார் பிரேமா காதல் படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது.