Categories: Cinema News latest news

இப்படியே போனா தொங்கவிட்டு அடிப்பானுங்க…! சந்திரமுகிக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லை..! ஜகா வாங்கிய லாரன்ஸ்..

Raghava Lawrence: பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து இருக்கும் திரைப்படம் சந்திரமுகி2. இப்படம் வரும் 28ந் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில், ராகவா லாரன்ஸ் இப்படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

ரஜினிகாந்தின் வெற்றி படமான சந்திரமுகி அவர் கேரியலில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இப்படத்தில் ஜோதிகா, பிரபு, நாசர், வடிவேலு, வீனித் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். பி.வாசு இப்படத்தினை இயக்கி இருந்தார்.

இதையும் படிங்க: ஜவானில் அட்லி செஞ்ச வேலை.. மூடி மறச்சி வெத்து பந்தா காட்டும் ஷாருக்கான்…

இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் வேட்டையன் கதாபாத்திரத்தில் லாரன்ஸும், சந்திரமுகியாக கங்கனா ரணாவத்தும் நடித்துள்ளனர். முதல் பாகம் போல இரண்டாம் பாகத்திலும் வடிவேலு காமெடியில் கலக்கி இருப்பதாக கூறப்படுகிறது. 

லைகா ப்ரோடக்‌ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைப்பு செய்து இருக்கிறார். கடந்த செப்டம்பர் 15ந் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் விஎஃப்எக்ஸ் வேளைகளால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.  

இதையும் படிங்க: எஸ்.ஜே.சூர்யாவுக்கு இந்த நோய் இருக்கு!.. பேட்டியில் ஓபனாக உடைத்த இயக்குனர்… இதுவுமா!

இந்நிலையில் இப்படத்திற்கும் முதல் பாகத்துக்கும் கொஞ்சமும் சம்மந்தம் இல்லை. சந்திரமுகி உண்மையிலேயே வந்தால் எப்படி இருக்கும் என்பதை தான் இப்படத்தில் பேசி இருக்கிறோம். ரஜினி சாரை என்னால் பிரதிபலிக்க முடியாது. அவரை மீறி நம்மால் நடிக்கவே முடியாது.

சந்திரமுகியின் பெயர் மட்டும் தான் அந்த பாகமும் இதுவும் வேறுவேறு தான். இப்படத்தில் எவர்க்ரீன் வடிவேலுவை மீண்டும் பார்க்க முடியும். அப்படி ஒரு காமெடியால் ரசிகர்களை அழுகவிடுவார் எனவும் தெரிவித்து இருக்கிறார்.

Published by
Akhilan