பல ஆண்டுகளாக இளைய தளபதியாக இருந்த விஜய் சமீபகாலமாக தளபதி விஜயாக மாறினார். இந்நிலையில் இளைய தளபதியிலிருந்து தளபதியாக மாறியதற்கு காரணம் ஒரு அரசியல் புள்ளி தான் என்று இயக்குயர் பேரரசு தெரிவித்துள்ளார். 1994ம் ஆண்டு முதல் இளைய தளபதி என்ற பட்டம் தான் விஜயின் அடைமொழியாக இருந்து வந்தது.
பல ஆண்டுகள் கழித்து சர்கார் பட சமயத்தில் அது தளபதியானது. இயக்குநர் பேரரசு விஜயை வைத்து திருப்பாச்சி, சிவாகாசி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த போது பேசிய அவர், திருப்பாச்சி படம் வெளியாவதற்கு முன்பு அந்த படத்தில் இளைய தளபதி என்று போடுவதற்கு பதில் புரட்சி தளபதி அல்லது தளபதி என்று போடலாம் என நான் கூறினேன்.
இதையும் படிங்க- சூப்பர்ஸ்டார் விவகாரம்!.. கொந்தளித்த விஜய் பட இயக்குநர்… பஞ்சாயத்து முடிச்சி போச்சு கிளம்பு!..
அதற்கு முதலில் வேண்டாம் என்று கூறிய விஜய் பிறகு எதுவாக இருந்தாலும் என் தந்தையிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என கூறிவிட்டார். நானும் எஸ்.ஏ.சி அவர்களிடம் சென்று இது குறித்து கேட்டேன். அப்போது அவர், இப்போது திமுகவினர் ஸ்டாலினை தளபதி என்று அழைக்கிறார்கள். எனவே தளபதி பட்டம் போட வேண்டாம் என்று கூறிவிட்டார்.
இதனால் ஏதாவது பிரச்சனை வரக்கூடும் என்று தெரிவித்தார். அவர் கூறுவதும் சரிதானே என்று நானும் விட்டுவிட்டேன். பல ஆண்டுகள் கழித்து இப்போது தான் விஜய் தளபதி என்ற பட்டத்தை போட்டுக்கொள்கிறார். இதற்கு காரணம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை எல்லோரும் தலைவர் என்று தற்போது அழைக்க தொடங்கிவிட்டனர்.
அல்லது முதலமைச்சர் என்று அழைக்கின்றனர். அதனால் தான் விஜய் இளைய தளபதி பட்டத்தை தளபதி என்று மாற்றிவிட்டார். விஜய் என்றைக்குமே தளபதி விஜய் தான் என்று இயக்குநர் பேரரசு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க- சிம்பு மேல எந்த தப்பும் இல்ல!. எல்லாத்துக்கும் காரணம் அவங்கதான்!.. இது தெரியாம போச்சே!..
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…