தமிழ் சினிமாவில் ஒரே பாட்டில் கோடீஸ்வரன் ஆகும் ட்ரெண்ட்டினை உருவாக்கியது யார் தெரியுமா? நட்சத்திர ஜன்னல் இல்லங்கோ...

by Akhilan |
நட்சத்திர ஜன்னல்
X

நட்சத்திர ஜன்னல்

ஒரே பாட்டில் கஷ்டப்பட்டு கொண்டு இருந்த நாயகனும், நாயகியும் பெரிய நிலைமையில் வந்து விடுவார்கள். இது போல பாட்டுக்களே பலருக்கும் கேட்கும் போது எனர்ஜியாக இருக்கும். இதற்கெல்லாம் முன்னோடி யார் தெரியுமா?

நம்ம தலைவர் ரஜினிகாந்த் தான். அவர் நடிப்பில் வெளியான அண்ணாமலை படத்தில் தான் இந்த ட்ரெண்ட் துவங்கியது. சிறுவயதில் இருந்து நண்பர்களாக இருக்கும் ஏழை பால் வியாபாரி அண்ணாமலைக்கும், பணக்கார ஹோட்டல் வியாபாரி அசோக்கிற்கு இடையே நடக்கும் நட்பு குறித்த படம் தான் அண்ணாமலை. ரஜினிகாந்த், சரத்பாபு, ராதாரவி, குஷ்பூ உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தினை இயக்கி இருந்தார்.

அண்ணாமலை

அண்ணாமலை

1992ம் ஆண்டு அப்போது அதிமுக தலைமையில் இருந்த தமிழக அரசு அண்ணாமலை திரைப்படத்திற்கு பெரிய பிரச்சனைகளை கொடுத்ததாக கூறப்படுகிறது. சென்னையின் சுற்று வட்டார பகுதிகளில் படத்திற்கு எந்த அறிவிப்பும் வெளியிட கூடாது என தடை விதித்தனர். இதனால் பலருக்கும் படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்தது. படம் மிகப்பெரிய அளவில் ஓடியது. 175 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடி சாதனை புரிந்தது.

அண்ணாமலை

அண்ணாமலை

இந்நிலையில், இப்படத்தில் தான் ஹீரோவுக்கான இண்ட்ரோ பாடல் முதல்முதலில் உருவாக்கப்பட்டதாம். அதேபோல ஒரே பாட்டுல ஹீரோ பணக்காரனாகுற காட்சிகள் அண்ணாமலை படத்தில் இருந்து தான் ஆரம்பிச்சது. ஆனால் இது ப்ளான் செய்து உருவாக்கப்பட்டதில்லையாம். படத்திற்காக அந்த காட்சிகள் எல்லாம் படமாக்கப்பட்டது. ஆனால் அது படத்தின் விறுவிறுப்பினை குறைத்ததாக சுரேஷ் கிருஷ்ணா நினைத்தாராம். உடனே பாடலாக அதை மாற்றியிருக்கிறார். அன்று துவங்கி ட்ரெண்ட் இன்று பலரை கவர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அண்ணாமலை படத்தில் குஷ்புவின் மேக்கப்பை பார்த்து ரஜினி சொன்ன அந்த ரகசியம்….! தலைவர் வேற லெவல்…

Next Story