நமீதா மாரிமுத்து வெளியேறிதற்கு முக்கிய காரணம் இது தான்!
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் முதன் முறையாக திருநங்கை ஒருவர் பங்கேற்றது இது தான் முதன் முறையாக பார்க்கப்பட்டது. இதனால் திருநங்கை சமூதாயத்தின் மீது மக்களுக்கு புரிதல் உணர்வு உண்டாகும் என் என எதிர்பார்க்க முடிந்தது.
இந்த நிகழ்ச்சியில் கடந்து வந்த பாதை டாஸ்கில் நமீதா ஒரு திருநங்கையாக தான் பட்ட கஷ்டங்களையும் அவமானங்களையும் வெளிப்படையாக பேசியது பலரையும் மனமுருக செய்தது. அவருக்கு ரசிகர்களும் மளமளவென அதிகரித்தனர்.
ஆனால், அவர் திடீரென வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு தாமரை தான் காரணம் என்றும் அவருடன் சண்டையிட்டு வெளியேற்றப்பட்டதாக வதந்திகள் வெளியானது. ஆனால், உண்மையில் நடந்தது இது தான், கடவுள் பக்தி அதிகமாக இருக்கும் நமீதா அன்று விரதம் இருந்து ஒரு நாள் முழுக்க சாப்பிடாமல் இருந்ததால் வீட்டில் மயங்கி விழுந்துள்ளார்.

இதையும் படியுங்கள்: கார்த்திகாக வெய்ட் முடியாது…விஷாலை டிக் செய்த இயக்குனர்
இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 2 நாட்கள் கழித்து தான் சுழநினைவுக்கு திரும்பியதாக அவரே கூறியிருக்கிறார். அதனால் தான் பிக்பாஸில் இருந்து வெளியேறியதாக தெரிவித்தார். இத்தனை நாட்களுக்கு பின்னர் இந்த உண்மை வெளிவந்திருப்பதை கேட்டு ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
