Categories: Cinema News Entertainment News television

BiggBossSeason7:நெஜமாவே ‘டபுள்’ எவிக்ஷன் தான் போல… அந்த ‘ரெண்டு’ பேரு யாருன்னு பாருங்க!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 25 நாட்களை தாண்டி சென்று கொண்டுள்ளது. வழக்கம்போல இந்த சீசனிலும் காதல் துளிர் விட்டு வளர ஆரம்பித்துள்ளது. கடந்த சீசன்களில் போல இல்லாமல் இந்த சீசனில் இரண்டு ஜோடிகளுக்கு மேல் காதல் கொண்டு பிக்பாஸ் வீட்டை காதல் மையமாக மாற்றி வருகின்றனர்.

அதிலும் நிக்ஸன்-ஐஷு ஜோடி மைக்கை கழற்றி வைத்துவிட்டு ஓவர் டைம் பார்த்து கொண்டிருக்கின்றனர். இதுவரை பவா செல்லத்துரை, அனன்யா, விஜய் வர்மா என மூன்று நபர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கின்றனர். இடையில் ஒரு வாரம் எவிக்ஷன் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் இந்த வாரம் வீட்டைவிட்டு இரண்டு பேர் வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கேப்டனாக இருந்த யுகேந்திரனும், வினுஷாவும் தான் அந்த இரண்டு நபர்கள் என்பது தேறிய வந்துள்ளது. யுகேந்திரன் இன்னும் சில வாரங்கள் தாக்கு பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட யுகேந்திரன் இவ்வளவு சீக்கிரம் வீட்டைவிட்டு வெளியேறியது லேசான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதே நேரம் வினுஷா டிஆர்பிக்காக பெரிதும் மெனக்கெடவில்லை என அவரையும் சேர்த்து வெளியேற்றி கண்ணா ஷாக் தரேன் வாங்கிக்கங்க என பிக்பாஸ் பார்முக்கு வந்துள்ளார். நாமினேஷன் பட்டியலில் இருந்தவர்களில் ஜோவிகா முதல் ஆளாக காப்பாற்றப்பட்டு இருக்கிறார்.

படிப்பு சம்பந்தமான அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினாலும் எனக்கு டிஆர்பி தான் முக்கியம் என அவரை முதல் ஆளாக காப்பாற்றி பிக்பாஸ் அழகு பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் வைல்டு கார்டு எண்ட்ரியாக கிட்டத்தட்ட ஐந்து போட்டியாளர்கள் வரை உள்ளே செல்ல இருக்கின்றனர்.

நாம் ஏற்கனவே சொன்னது போல விஜே அர்ச்சனா, விஜே ப்ராவோ, கானா பாலா, சின்னத்திரை நடிகர் தினேஷ் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி ஆகியோர் தான் அந்த ஐந்து பேர் என உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. நாளை இவர்கள் உள்ளே செல்லும் நிகழ்வையும் சேர்த்து மூன்று மணி நேரம் வரை பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகலாம் என தெரிகிறது.

Published by
manju