அஜித்தின் வேதாளம் படத்தில் தங்கையாக நடிக்க இருந்தது இந்த விஜய் டிவி தொகுப்பாளினியா?

by Akhilan |   ( Updated:2025-05-05 06:14:36  )
அஜித்தின் வேதாளம் படத்தில் தங்கையாக நடிக்க இருந்தது இந்த விஜய் டிவி தொகுப்பாளினியா?
X

#image_title

Vedhalam: அஜித் மற்றும் லட்சுமிமேனன் இருவரும் நடித்து சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் வேதாளம். இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது பிரபல சின்னத்திரை தொகுப்பாளனி என்ற ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சிறுத்தை சிவா மற்றும் அஜித் குமார் கூட்டணியில் உருவான திரைப்படம் வேதாளம். வித்தியாசமான நடிப்பு படம் மங்காத்தா வசூலை தட்டி தூக்கியது. இப்படத்தில் அஜித்தின் தங்கையாக லட்சுமிமேனன் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதில் லட்சுமி மேனன் கேரக்டர் ரசிகர்களிடம் நல்ல புகழை பெற்றது. ஆனால் இந்த கேரக்டருக்கு நிறைய நடிகைகளிடம் பேச்சுச்வார்த்தை நடத்தி இருக்கின்றனர். முதலில் இந்த ரோல் பிந்து மாதவிக்கு சென்றுள்ளது. ஆனால் அவர் தங்கை என்பதால் வேண்டாம் என்று இருக்கிறார்.

இதை தொடர்ந்து ஸ்ரீதிவ்யாவிடனும் பேச்சுவார்த்தை நடத்த அவரும் ஹீரோயின் ரோல் என்றால் ஓகே இதை தன்னால் பண்ண முடியாது என மறுத்து இருக்கிறார். பார்வதி நாயர் கால்ஷீட் பிரச்னையால் படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். இதை தொடர்ந்து டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினியிடம் கேட்டுள்ளனர்.

#image_title

அவர் அந்த நேரத்தில் கால் அறுவை சிகிச்சையால் வீட்டில் ஓய்வில் இருக்க நடிப்பில் ஆர்வம் இல்லை என கதை கேட்காமலே மறுத்து விடுகிறார். பின்னர் சரி கதையை கேட்கலாம் எனக் கேட்டால் தான் அது வேதாளம் தங்கை கேரக்டர் என்று தெரிந்ததாம்.

சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளனியாக இருந்த திவ்யதர்ஷினி டிடி என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். கொடிக்கட்டி பறந்து வந்தவர் தன்னுடைய திருமண வாழ்க்கையில் நடந்த பிரேக்கப், அறுவை சிகிச்சை பிரச்சனைகள் என தொலைக்காட்சியில் இருந்து மொத்தமாக விலகி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story