‘கில்லி’ விஜய்னு நினைச்சி போனா அது முட்டாள்தனம்! மனசுல ஒன்னும் வெளில ஒன்னும் வச்சு பேசுராறோ?

by Rohini |   ( Updated:2023-08-25 13:56:27  )
vijay
X

vijay

தமிழ் சினிமாவில் ஒரு சிறப்பான காம்போவாக பார்க்கப்பட்டது விஜய் மற்றும் பிரகாஷ்ராஜ் கூட்டணிதான். இருவரும் இணைந்து பல படங்களில் கலக்கியிருக்கின்றனர். விஜய்க்கு நிகரான வில்லனாகவே பிரகாஷ் ராஜ் பார்க்கப்பட்டார். ரஜினிக்கு எப்படி ஒரு ஆஸ்தான வில்லனாக ரகுவரன் இருந்தாரோ அதே போல் விஜய்க்கு பிரகாஷ்ராஜ் இருந்தார்.

கில்லி, சிவகாசி, போக்கிரி, வில்லு, போன்ற படங்களில் விஜய்க்கு வில்லனாக நடித்திருப்பார். அதே போல் ஆதி, நேருக்கு நேர் போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் அசத்தியிருப்பார். இப்படி தொடர்ந்து விஜயின் படங்களில் தோன்றிய பிரகாஷ்ராஜுக்கும் விஜய்க்கும் இடையே ஒரு நல்ல நெருக்கம் ஏற்பட்டது.

இதையும் படிங்க : இவ்வளவு கலெக்‌ஷனா?!.. எதிர் நீச்சல் ரேணுகா செய்த சூப்பர் ஷாப்பிங்!.. வைரலாகும் வீடியோ

மறுபடியும் இவர்கள் கூட்டணியை எப்போது பார்க்க போகிறோம் என்று ஏங்கியிருந்த மக்களுக்கு வாரிசு படம் வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முந்தைய படங்களில் இருப்பதை போல் அந்த ஒரு மாஸ் வாரிசு படத்தில் விஜய்க்கு பிரகாஷ்ராஜுக்கு இருப்பதாக தெரிவதில்லை.

இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜயை பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்தார். அதாவது 14 வருடங்கள் கழித்து பார்த்த விஜய் பார்க்க மிகவும் அழகாக இருந்தான் என்றும் மிக அழகாக இருந்தான் என்றும் ஒருமையிலேயே பேசினார்.

மேலும் எல்லாரையும் நேசித்தான் என்றும் தெலுங்குகாரன்கூட பார்க்காம இயக்குனர், தயாரிப்பாளர் என அனைவரையும் வீட்டுக்கு அழைத்து உபசரித்தான் என்றும் அதை பார்க்கும் போது மிக சந்தோஷமாக தெரிந்தது என்று பிரகாஷ்ராஜ் கூறினார்.

இதையும் படிங்க : எல்லாரும் அடங்குங்க!.. இதான் ஜெயிலர் ரியல் கலெக்‌ஷன்!.. சன் பிக்சர்ஸ் கொடுத்த அப்டேட்!…

ஒரு மனிதரை 14 வருடம் கழித்து பார்க்கும் போது முன்பு இருந்த மாதிரி இருப்பார் என நினைக்க கூடாது எனவும் இந்த 14 வருடங்களுக்குள் விஜய்க்குள் என்ன நடந்திருக்கும் என்பதையும் பார்க்க வேண்டும் எனவும் அதனாலேயே அவனுக்கு ஒரு ரசிகனாகவே நான் மாறியிருக்கிறேன் என்று கூறினார்.

Next Story