வார இறுதிக்கு பக்கா ஸ்கெட்ச்… ஓடிடியில் வரிசை கட்டிய வெப்சீரிஸ்.. இதோ லிஸ்ட்..

by Akhilan |   ( Updated:2024-08-16 11:12:15  )
வார இறுதிக்கு பக்கா ஸ்கெட்ச்… ஓடிடியில் வரிசை கட்டிய வெப்சீரிஸ்.. இதோ லிஸ்ட்..
X

தமிழ் ரசிகர்கள் தியேட்டர் சென்று படம் பார்க்கும் வழக்கத்தை தற்போது குறைத்துக் கொண்டுள்ளனர். அந்த ஆர்வத்தினை தற்போது ஓடிடி பக்கம் திருப்பி உள்ளனர். அந்த வகையில் இந்தவாரம் ஓடிடி ரிலீஸில் என்னென்ன படங்கள் வெளியாக இருப்பது குறித்த முக்கிய தொகுப்பு.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களான மோகன்லால், மம்முட்டி, பகத் ஃபாசில் உள்ளிட்ட ஒன்பது நடிகர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் 9 குறும்படங்கள் அடங்கிய அந்தாலஜி திரைப்படம் மனோரதங்கள். ஒவ்வொரு படத்திற்கும் முன்னர் நடிகர் கமல்ஹாசன் இதற்கு முன்னுரை வழங்குகிறார்.

இதையும் படிங்க: சூப்பர்ஸ்டார்களின் சாதனையை சமன் செய்த நடிகை ஊர்வசி… விருதில் சாதித்த சுவாரஸ்யம்…

விருது பெற்ற எழுத்தாளர் மற்றும் கதாசிரியர் எம்டி வாசுதேவன் நாயர் எழுதிய ஒன்பது கதைகள் அடங்கிய படம் ஜீ தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. சத்யராஜ், ரேகா, சீதா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட் வெப் சீரிஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் (ஆகஸ்ட்16) இன்று வெளியாகி இருக்கிறது. இந்த வெப் சீரிஸிற்கு வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார்.

கார்த்தி நடிப்பில் வெளியான நான் மகான் அல்ல படத்தில் வில்லனாக நடித்த வினோத் கிஷன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இருவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் கொஞ்சம் பேசினால் என்ன திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

இதையும் படிங்க: மொக்கை வாங்கிய விஜய் டிவி…மீண்டும் முதலிடத்தினை பிடித்த சன் டிவி!…

Next Story