More
Categories: Cinema News latest news

விஜய் டூ சந்தானம்… ஜி.வி. டூ துல்கர்… இந்த வார ஓடிடியில் ரிலீஸாக இருக்கும் சூப்பர் ஹிட் படங்கள்..!

OTT Release: தியேட்டரில் படங்கள் ரிலீஸாகும் நாளை விட தற்போது ஓடிடி ரிலீஸுக்கு தான் ரசிகர்கள் செம ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்த வாரம் தான் லிஸ்ட் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. எந்த ஓடிடியில் என்ன படம் வெளியாக இருக்கிறது என்ற பெர்பெக்ட் லிஸ்ட்டின் தொகுப்பு உங்களுக்காக.

கிங் ஆஃப் கோதா: மலையாளத்தில் வெளியான ப்ரீயாடிக் திரைப்படம். இப்படத்தில் துல்கர் சல்மான் , ஷபீர் கல்லாரக்கல் , பிரசன்னா , கோகுல் சுரேஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி , நைலா உஷா , செம்பன் வினோத் ஜோஸ் ஆகிய நடிகர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஐஎம்டிபியில் 6.6 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

Advertising
Advertising

இதையும் படிங்க: பாக்கியலட்சுமி: பழிவாங்கிய ராதிகாவை புகழ்ந்து தள்ளிய கோபி… ஓட்டிங்கில் மொத்தமாக கவுந்த பாக்கியா..!

குஷி: சமந்தாவின் கம்பேக் படமான குஷியில் விஜய் தேவரகொண்டா நடித்து இருந்தார். இருவருக்கும் கெமிஸ்ட்ரி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. ஜம்மு காஷ்மீர் மலைப்பகுதியில் ராணுவ அதிகாரிக்கும் காஷ்மீரி பெண்ணுக்கும் இடையே நடக்கும் காதல் கதை.  ஐஎம்டிபியில் 6.3 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

அடியே: அடியே ஒரு சயின்ஸ் பிக்‌ஷன் படம். விக்னேஷ் கார்த்திக் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், கௌரி ஜி.கிஷன் மற்றும் வெங்கட் பிரபு, மிர்ச்சி விஜய், மதுமகேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ஐஎம்டிபியில் 7.6 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. சோனி லைவில் ரிலீஸாகி இருக்கிறது.

இதையும் படிங்க: யம்மா காசு இருக்குனு இந்த பந்தா ஓவரு… நயன் வீட்டுக்கு புது எண்ட்ரி.. இத்தனை கோடியா?

ஹர்ஹரா: ராம் அருண் மற்றும் காளி வெங்கட் நடிப்பில் வெளியாக இருக்கும் ஹர்ஹரா திரைப்படம். இதுவும் பிரியாடிக் படம் வெளியாக இருக்கிறது. ஐஎம்டிபியில் 9.7 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. ஆஹா தளத்தில் ரிலீஸாகி இருக்கிறது.

கிக்: பிரசாந்த் ராஜ் இயக்கிய கன்னடப் படமான ஜூம் படத்தின் ரீமேக். இப்படத்தில் சந்தானம் மற்றும் தன்யா ஹோப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மனோபாலாவின் கடைசி திரைப்படம் இதுதான். ஐஎம்டிபியில் 8.5 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸாகி இருக்கிறது.

இதுமட்டுமல்லாமல், ஆஹாவில் டர்ட்டி ஹரி, நெட்பிளிக்ஸில் ரெப்டைல், லவ் ஈஸ் இன் தி ஏர், சோனி லைவில் ஏஜென்ட், ஜீ5ல் ஐ கில்டு பாபு ஆகிய திரைப்படங்கள் ரிலீஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Published by
Akhilan

Recent Posts