OTT Release: இந்திய சினிமாவில் இந்த வாரம் எக்கசக்க திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இதில் நிறைய தமிழ் படங்கள் இருப்பதால் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர். அதன் சூப்பர் தொகுப்பு இதோ.
வைபவ், பால சரவணன், நிஹாரிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பெருசு. ஏ படம் என்றாலும் காமெடிகள் ஹிட்டடித்து படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கிறது.
ஜோ படத்தின் வெற்றிக்கு பின்னர் தொகுப்பாளர் ரியோ ராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் ஸ்வீட் ஹார்ட். அவருக்கு கை கொடுத்த அதே காதல் ஜானர் என்றாலும் ஓவர் ரொமான்சால் படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் தெறிக்கவில்லை.
இப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது. பிரியதர்ஷி நடிப்பில் பேன் இந்திய மொழிகளில் வெளியாகி இருக்கும் கோர்ட் சட்டத்தின் பிரச்னையை பற்றி பேசி இருக்கிறது. இந்த வாரம் நெட்பிளிக்ஸில் ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது.

ஜெகபதிபாபு நடிப்பில் தெலுங்கில் வெளியான திரைப்படம் ரக்ஷா. ஹாரர் திரில்லரான இப்படம் இந்த வாரம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.
மலையாளத்தில் சூப்பர் ஹிட் நடிகராக வலம் வரும் பேசல் ஜோசப் சமீப காலமாக வாரம் ஒரு படத்தை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இந்த வாரம் வெளியாக இருக்கும் பிரவீன் கூடு ஷபு சோனி லைவ் ஓடிடியில் வழியாக இருக்கிறது.
இதுமட்டுமல்லாமல் கவுண்டமணியில் நடிப்பில் வெளியான ஒத்த ஓட்டு முத்தையா திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடியிலும், விமல் நடிப்பில் வெளியான படவா சிம்பிள் சவுத்திலும் வெளியாக இருக்கிறது. இந்த ஆண்டு பெரிய அளவில் வசூல் குவித்த பாலிவுட்டின் சூப்பர் ஹிட் படமான சாவா நெட்பிளிக்ஸில் வெளியிடப்பட இருக்கிறது.
இதுமட்டுமல்லாமல் ஜிவி பிரகாஷ் நடிப்பில் ஓரளவு சுமார் வெற்றியை பெற்ற கிங்ஸ்டன் திரைப்படம் ஜீ தமிழ் ஓடிடியில் இந்த வாரம் வெளியாக இருக்கிறது. மேலும் இதில் சில மாற்றங்களும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.