OTT Watch: வீக் எண்ட் சூப்பர் ஜாலி… இந்த வார ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸ்!

Published On: April 5, 2025
| Posted By : Akhilan

OTT Watch:  இந்த வாரம், OTT தளங்களில் பல்வேறு புதிய திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழில் மற்றும் தென்னிந்திய மொழிகளில் இந்த வாரம் நிறைய படங்கள் வெளியாகி இருக்கிறது.

டெஸ்ட் திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடித்துள்ளனர். ஓவர் ஆசையில் எடுத்த படம் என்றாலும் பல சொதப்பல்கள் என்பதே உண்மை. 

மர்மர் திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. திகில் கொண்ட பேய் படமாக ஓவர் பில்டப் இருப்பதால் ஓடிடியில் என்ன வரவேற்பு பெறும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். 

கடைசி தோட்டா, சிம்ப்ளி சவுத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம், குடும்ப உறவுகளின் அழகிய கதை மற்றும் நெகிழ்ச்சியை பிரதிபலிக்கின்றது. கதை சுவாரஸ்யமான மற்றும் உணர்ச்சி மிகுந்த பயணத்தை காட்டுகிறது.

ஹோம்டவுன் என்பது ஆஹா ஓடிடியில் வெளியிடப்பட்ட ஒரு தெலுங்கு படம். குடும்ப உறவுகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த கதை, சமூக மற்றும் குடும்ப கதையாக இருக்கும்.

ஓடிடி

தமிழில் சூப்பர்ஹிட் அடித்த லவ் டூடே படத்தின் இந்தி ரீமேக்கான லவ்யபா ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது அமீர்கானின் மகன், ஸ்ரீதேவியின் மகள் நடித்து செம பல்ப் வாங்கிய படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

டச் மீ நாட் என்பது தற்போது ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு மிக பரபரப்பான தெலுங்கு தொடர் ஆகும். இந்த தொடரில் பிரபல தெலுங்கு நடிகர்கள் சுப்பர்ன்யா, அஞ்சலி, மற்றும் அருண் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.