நெருங்கும் விஜய் டிவி… கோட்டை விடும் சன் டிவி… டிஆர்பியில் அதிரடி மாற்றம்!

sun tv
TRP Rating: சின்னத்திரை சீரியலில் இந்த வாரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று டாப் 10 இடங்களை பிடித்த சீரியலின் தொகுப்பு வெளியாகி இருக்கிறது. இதில் எப்போதும் போல இந்த முறையும் சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு இடையில் செமையான போட்டி இருக்கிறது.
பெரும்பாலும் சன் டிவி சீரியல்களுக்கே அதிக டிஆர்பி கிடைக்கும். ஆனாலும் கடந்த சில ஆண்டுகளாகவே இந்த பட்டியலுக்குள் விஜய் டிவி நுழைந்து விட்டது. அப்படி இந்த வாரமும் நிறைய மாற்றங்களும் நிகழ்ந்து இருக்கிறது. 10வது இடத்தில் விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் அய்யனார் துணை.
அண்ணன் தம்பிகள் கதை என்றாலே எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் வெற்றி பெறும் என்பதால் இந்த சீரியலுக்கு தற்போது வரவேற்பு கூடி வருகிறது. இதற்கு மேல் ஒன்பதாவது இடத்தில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 இடம் பிடித்து இருக்கிறது.
அரசியின் காதல் கதை தெரிந்து சீரியல் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. எட்டாவது இடத்தில் விஜய் டிவியே இடம் பிடித்து இருக்கிறது. சின்ன மருமகள் சீரியல் தற்போது நல்ல கதைக்களத்துடன் செல்வதால் அந்த சீரியலுக்கு வரவேற்பு கூடி இருக்கிறது.

ஏழாவது இடத்தில் சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இடம்பிடித்துள்ளது. மாரிமுத்து இறப்புக்கு பின்னர் முதல் பாகம் முடிக்கப்பட்டு இரண்டாம் பாகம் தொடங்கப்பட்ட நிலையில் அதுவும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சன் டிவியின் சீரியலான மருமகள் மற்றும் அன்னம் சீரியல் முறையே ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் இருக்கிறது. கடந்த வாரம் ரொம்ப நாட்களாக உடைக்கப்பட வேண்டும் என ரசிகர்கள் விரும்பிய ரோகிணியின் மலேசிய ரகசியம் உடைந்தது.
இருந்தும் அவர் பெரிதாக மாட்டாமல் தப்பித்து விட்டதால் நான்காம் இடம் பிடித்து இருக்கிறது இந்த சீரியல். எப்போதும் போல டாப் 3 இடங்களை சன் டிவியே தக்க வைத்துள்ளது. கயல் சீரியலுக்கு மூன்றாம் இடமும், மூன்று முடிச்சு சீரியலுக்கு இரண்டாம் இடமும் கிடைத்துள்ளது.
காதல் கதையை சொல்லும் சிங்கப்பெண்ணே சீரியலுக்கு முதல் இடம் கிடைத்து இருக்கிறது. அடுத்த வாரம் பெரிய மாற்றம் இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.