சூப்பர் டீலக்ஸ் 'காவிய' இயக்குனர் அடுத்து இந்த வேளையில் இறங்கிட்டாரே.?! மிகுந்த வருத்தத்தில் ரசிகர்கள்..

by Manikandan |   ( Updated:2022-07-24 01:47:03  )
சூப்பர் டீலக்ஸ் காவிய இயக்குனர் அடுத்து இந்த வேளையில் இறங்கிட்டாரே.?! மிகுந்த வருத்தத்தில் ரசிகர்கள்..
X

தமிழ் சினிமாவில் வெறும் இரண்டு திரைப்படங்கள் மட்டுமே எடுத்து இந்திய திரை பிரபலங்களையும், ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் என்றால் அது இயக்குனர் தியாகராஜா குமார் ராஜா அவர்கள் தான்.

முதல் படம் ஆரண்ய காண்டம் தேசிய விருது வாங்கிய பிறகும் கூட, நீண்ட வருடங்கள் கழித்து சூப்பர் டீலக்ஸ் எனும் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்றது. அதே சமயம் சில சர்ச்சைகளிலும் சிக்கியது.

இந்த திரைப்படத்தில் தான் விஜய் சேதுபதி சிறந்த துணை நடிகருக்கான தேசிய வருகை தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல்வேறு சிறப்புகளை பெற்ற பின்னரும் அடுத்த திரைப்படத்தை பற்றி இன்னும் தியாகராஜா குமார் ராஜா அறிவிக்காமல் இருக்கிறார்.

இதையும் படியுங்களேன் - விஜய்க்கு அந்த விஷயம் ரெம்ப பிடிக்கும்.. ஆனால், செய்யமாட்டார்... பிரபல இயக்குனர் கூறிய சீக்ரெட் தகவல்...

இந்த நிலையில், தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அமேசான் தளத்திற்காக தற்போது தியாகராஜ குமார் ராஜா ஒரு படத்தை எடுக்க உள்ளாராம். ஆனால், அந்த திரைப்படத்தை அவர் தயாரிக்க மட்டும் தான் செய்கிறாராம். படத்தை தயாரிப்பதற்காக அமேசான் நிறுவனம் இவருக்கு 35 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக தற்பொழுது தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு நல்ல இயக்குனர் அடுத்து நல்ல திரைப்படத்தை இயக்குவார் என்று எதிர்பார்த்து காத்து இருந்தால், அவர் அடுத்து இயக்கவில்லை தயாரிப்பில் இறங்கி விட்டார் என்பது ரசிகர்களுக்கு சற்று வருத்தமாக உள்ளது.

Next Story