பிரசாந்துக்காக சொல்ல வேண்டானு இருந்தேன்.. அந்தகன் பட சமயத்தில் இப்படிலாம் நடந்ததா?
Prasanth: அந்தகன் திரைப்படத்திற்கு பிறகு பிரசாந்த் மீண்டும் தனது செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார். 90கள் காலகட்டத்தில் ஒரு டாப் ஸ்டார் ஆக திகழ்ந்து வந்தவர் பிரசாந்த். விஜய் அஜித் இவர்களையே மிஞ்சும் அளவுக்கு மிகவும் புகழ்பெற்று இருந்தார் பிரசாந்த்.
இப்போது விஜய் அஜித்திற்கு எந்த அளவு ஒரு பெரிய கிரேஸ் இருக்கிறதோ அதைவிட அதிகமாக 90கள் காலகட்டத்தில் பிரசாந்துக்கு இருந்தது. அப்படி இருந்தவர் இடையில் சினிமா வாய்ப்பு இல்லாமல் இருந்தார். அதன் பிறகு தான் ஹிந்தியில் மாபெரும் ஹிட்டு அடித்த அந்தாதூன் திரைப்படத்தை தமிழில் ரைட்ஸ் வாங்கி அந்த படத்தை எடுக்க திட்டமிட்டார் தியாகராஜன்.
இதையும் படிங்க: ஷகீலானு பேரு சொல்லவே கடுப்பா இருக்கு… ஹேமா கமிட்டி பத்தி அவங்க பேசலாமா? வெளுக்கும் பிரபலம்
முதலில் வேறு ஒரு இயக்குனரை வைத்து எடுக்க பிரசாந்தின் அப்பா தியாகராஜன் முடிவு செய்திருந்தாராம். அப்போது அந்த இயக்குனர் தனக்கு தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து ஒரு படம் எடுக்க வேண்யிருக்கிறது. ஒரு ஆறு மாதம் கழித்து இந்த படத்தை எடுக்கலாம் என சொன்னாராம் .
அதனால் அந்த இயக்குனர் வேண்டாம் என முடிவெடுத்தாராம் தியாகராஜன். அதன் பிறகும் ஒரு இயக்குனரை வைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறார். ஆனால் அதுவும் சரி வரவில்லையாம். கடைசியில் தன் மகனை வைத்து தானே படத்தை இயக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.
இதையும் படிங்க: கோட்டில் சிவகார்த்திகேயனுக்கு அந்த டயலாக்கை போட்டதே விஜய்தானாம்… பக்கா ஸ்கெட்ச்தான்!
ஆனால் அந்த இயக்குனர்கள் யார் என்பதை பற்றி எந்த ஒரு பேட்டியிலும் தியாகராஜன் கூறவில்லை. அதற்கு என்ன காரணம் எனக்கே கேட்டபோது படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடி நான் இதைப் பற்றி கூறியிருந்தால் பிரசாந்தை பாதித்திருக்கும். படம் ரிலீஸுக்கு பின்னாடி கூறியிருந்தால் வெற்றியின் தலக்கணத்தோடு பேசுகிறார் என கூறுவார்கள்.
அதனால் தான் அந்த இயக்குனர்களின் பெயரை நான் எந்த ஒரு பேட்டியிலும் கூறவில்லை என தியாகராஜன் விளக்கம் அளித்திருக்கிறார். தன் மகனுக்காக எவ்வளவோ பொறுத்துக் கொண்டு வருகிறார் தியாகராஜன். இன்னொரு பக்கம் பிரசாந்த் வாழ்க்கை இந்த அளவுக்கு போனதுக்கு காரணமே தியாகராஜன் தான் என்றும் பல விமர்சனங்கள் வருகின்றன.
இதையும் படிங்க: கோட் படத்தோட வெற்றி ரகசியம் இதுதானாம்… அப்படி என்னப்பா இருக்கு படத்துல?
அதுமட்டுமல்லாமல் பிரசாந்த் சினிமா கெரியரில் தியாகராஜனின் தலையீடும் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அது எதுவுமே இல்லை என்றும் இந்த பேட்டியில் தெளிவாக கூறியிருக்கிறார் தியாகராஜன்.