More
Categories: Cinema News latest news

தயாரிப்பாளருக்குத்தான் எல்லாமே சொந்தம்.. இளையராஜா பணத்தாசை பிடிச்சவரா?.. தியாகராஜன் ஓப்பன் பேட்டி!..

தான் இசையமைத்த பாடல்களை மற்ற யாரும் பயன்படுத்த உரிமை இல்லை என்றும் அப்படி பயன்படுத்த வேண்டும் என்றால் தனக்கு ராயல்டி கொடுக்க வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அவருக்கு எதிராக சில இசை நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்து உள்ளன. அந்த வழக்கு தற்போது நடைபெற்று வரும் நிலையில், ஒரு பாடலுக்கு இசை முக்கியமா அல்லது பாடல் வரிகள் முக்கியமா என்கிற பிரச்சனை எழுந்துள்ளது.

சமீபத்தில், படிக்காத பக்கங்கள் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட வைரமுத்து பேசியது சர்ச்சையை கிளப்பியது. அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கங்கை அமரன் எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertising
Advertising

இதையும் படிங்க: இந்த ஓப்பன் போதுமா?.. இன்னும் கொஞ்சம் வேணுமா?.. ஸ்டார் பட ஜிமிக்கி காட்டுற சீனே வேற!..

இந்நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகர் பிரசாந்தின் அப்பா தியாகராஜன் அந்த காலத்தில் இசை உள்ளிட்ட அனைத்தும் தயாரிப்பாளருக்கு மட்டுமே சொந்தமாக இருந்ததாக கூறியுள்ளார்.

மேலும், இளையராஜா பணத்தாசை பிடித்தவரா என்ற கேள்விக்கு இளையராஜா அப்படிப்பட்டவர் அல்ல, தனக்கு கிடைக்க வேண்டிய உரிமையை பெறத்தான் போராடி வருகிறார். அதற்காக அவரை பணத்தாசை பிடித்தவர், சுயநலக்காரர் என்று சொல்வதெல்லாம் சரி கிடையாது. ஆரம்பத்திலிருந்து நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தோம். பல்வேறு கோயில்களுக்கு என்னை அழைத்து செல்ல சொல்வார். என்னுடைய காரிலேயே அவரை இனி நான் கோயில்களுக்கு கூட்டிச் செல்வேன் என்றும் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டாருனு நினைச்சு என் ஸ்டார இழந்துட்டேன்! ரஜினி படத்தால் கெரியரை இழந்த நடிகை

இளையராஜாவுக்கு இசை உரிமையை கொடுத்த நிறுவனங்கள் போட்டு ஒப்பந்தங்கள் சரியாக இல்லாத காரணத்தினால் தான் இப்படி ஒரு பிரச்சனை வழக்காக இழுத்துக் கொண்டே செல்வதாக தியாகராஜன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் அவரது அசிஸ்டன்ட்கள், ஒளிப்பதிவாளர் அவரது உதவியாளர்கள், இயக்குனர் அவரது அசிஸ்டன்ட் டைரக்டர்கள், நடிகர்கள், துணை நடிகர்கள், அனைவருக்குமான தினமும் சாப்பாடு, டீ, காபி என அனைத்தையும் கடைசி வரை பைனான்சியர்களிடம் வட்டிக்கு பணம் வாங்கி பார்த்து பார்த்து செய்யும் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே அப்போது இசை உள்ளிட்ட அனைத்தும் சொந்தமாக இருந்தது. அப்படித்தான் இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. ஆனால், இளையராஜாவுக்கு கிடைத்துள்ள உரிமையை அவர் மீட்டெடுக்க போராடி வருகிறார். அவர் மீதும் எந்தவொரு தவறும் இல்லை என பேசியுள்ளார் தியாகராஜன்.

இதையும் படிங்க: சிஎஸ்கே மேட்ச் பார்க்க வந்த பிளடி பெக்கர்ஸ்!.. ஜெயிலர் 2 அப்டேட் கேட்ட ரசிகர்கள்!.. வைரல் வீடியோ!..

Published by
Saranya M