Cinema News
விஜயகாந்த் ஆசை தான் போல!… இடத்துக்காக எதுவும் கேட்கவில்லை பிரேமா!… கலங்கிய தியாகு
Vijayakanth: தமிழ் சினிமாவில் புரட்சி கலைஞராக இருந்து சமீபத்தில் இறந்த விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும், நடிகருமான தியாகு இருவருக்கும் இடையேயான நட்பு குறித்தும், இறப்பு அன்று நடந்த நிகழ்வு குறித்தும் பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் இருந்து, எனக்கு காலை 7 மணிக்கே சிலரிடம் இருந்து கால் வந்தது. விஜயகாந்த் இறந்துவிட்டாராம் என்று கேட்டனர். எனக்கே தெரியவில்லை. தொடர்ந்து கால் வந்து கொண்டே இருந்தன. நானும் பதறி அடித்து எழுந்து குளித்துவிட்டு கிளம்ப சரியாக 9 மணிக்கெல்லாம் எனக்கு விஷயம் வந்துவிட்டது.
இதையும் படிங்க: கடைசியாக அரசியல் படம்.. தளபதி69 படத்தினை இயக்க போவது இந்த ஹிட் இயக்குனரா?
விஜியை பார்த்ததும் கதறிவிட்டேன். மயக்கமே வந்துவிட்டது. நெஞ்சு துடிப்பும் அதிகமாகிட்டது. தேமுதிக அலுவலகத்தில் உட்கார்ந்து இருந்தோம். சிங்கம் மாதிரி பார்த்தவனை அப்படி பார்க்கவே முடியவில்லை. கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. என் குடும்பத்தினர் கிளம்பலாம் என்கின்றனர்.
தட்டுதடுமாறி வந்தோம். வீட்டுக்குள் செல்லாமல் வாசலில் உட்கார்ந்து விட்டேன். உடனே சுகாதாரத்துறை அமைச்சருக்கு கால் செய்து விஜிக்கு ராஜாஜி ஹாலை கேட்டேன். அது பராமரிப்பில் இருப்பதாக சொன்னார்கள். எதாவது பண்ணுங்களேன் எனக் கதறினேன். பின்னர் தீவுத்திடல் கொடுத்தனர். நான் போய் அவன் பக்கத்தில் உட்கார்ந்து விட்டேன். எனக்கு முடியவில்லை தான். ஆனால் கதறிக்கொண்டு தான் இருந்தேன்.
புரட்சிக்கலைஞர், நடிகர், எதிர்க்கட்சி தலைவராக இருந்தவருக்கு புதைக்க இடம் வேண்டும் எனக் கேட்கவே இல்லை பிரேமா அம்மா. ஒரு வேளை அவனே கடைசி காலத்தில் சொல்லி இருப்பான் போல. அவனை புதைச்சாங்க. எனக்கு வானத்தை போல பாடல் அவனுக்காகவே அமைந்தது.
இதையும் படிங்க: அதிக பாடகர்கள் பாடிய ஒரே படம்! நம்ம கேப்டன் படம்தான்.. என்ன படம்னு நீங்களே பாருங்க
விஜி ஜெயலலிதாவுடன் கடைசி வரை இருந்து இருந்தால் கண்டிப்பாக முதல்வராக வந்து இருப்பான். அவனுக்கு நினைவு மண்டபம் கட்ட அரசு ஒரு இடத்தினை கொடுக்க வேண்டும். தேமுதிக அலுவலகத்திற்கே இத்தனை பேர் வருகிறார்கள். கண்டிப்பாக மதுரையில் ஒரு சிலை வைக்கவும் கோரிக்கை விடுத்து இருக்கிறார்.