டிடிஎஃப் வாசன் மீது திடீர் கொலைமுயற்சி… வெளியான அதிர்ச்சி வீடியோ…
TTF Vasan: பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் குறித்து பலருக்கும் தெரியும். சமீப காலமாக சர்ச்சையில் சிக்கி வந்தவர். தற்போது மிகப்பெரிய பிரச்சினை சிக்கி வெளிவந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்தியா டிஜிட்டல் மயமான நிலையில் தற்போது யூட்யூபர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருக்கிறது. இதில் சிலருக்கு தான் ரசிகர்கள் கூட்டம் எண்ணிக்கையில் அடங்காமல் இருக்கும். அந்த லிஸ்டில் முக்கிய இடத்தில் இருப்பவர்தான் டிடிஎஃப் வாசன்.
இதையும் படிங்க: அப்போ பிக்பாஸ் இவர் தானா? புரோமோ ஷூட்டில் கசிந்த வீடியோ… பக்காவா இருக்காரே!..
ஒருமுறை ரசிகர்கள் கூட்டம் வைக்க 10 லட்சம் சப்ஸ்கிரைப்பர்ஸ் வைத்திருந்த வாசனுக்கு லட்சத்திற்கும் அதிகமானோர் ஒரே இடத்தில் கூடியது பலரையும் அதிர்ச்சியடைய செய்தது. அன்றிலிருந்து வாசன் கவனிக்கப்பட தொடங்கினார். தொடர்ந்து அவருக்கு சர்ச்சைகளும் வரிசை கட்டியது.
பேட்டிகளில் பிரச்சினை, ஓவர் ஸ்பீடில் போலீஸிடம் அபராதம் என வைரலாகி வந்த வாசன் திடீரென மோட்டார் விபத்தில் சிக்கி கையை உடைத்துக் கொண்டார். அதைத்தொடர்ந்து அவருடைய லைசென்ஸ் நீக்கப்பட்டது. ஜெயிலுக்கு சென்று திரும்பினார். மஞ்சள் வீரன் என்ற படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
இதையும் படிங்க: அஜித்தை பற்றி யோகிபாபு சொன்னதுக்கு ஆதாரம் இருக்கா? பூதாகரமாக கிளம்பிய பிரச்சினை
கர்நாடக மாநிலத்தில் குடகு மாவட்டத்தில் குளிக்க சென்ற போது அவரை சிலர் கொல்ல முயற்சித்ததாக வீடியோக்கள் வெளியானது. இது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இது மட்டுமல்லாமல் அங்கு நடந்த விஷயங்களின் மொத்த வீடியோவையும் இணையத்தில் வெளியிடுவேன் எனவும் குறிப்பிட்டிருக்கிறார். அந்த வீடியோவின் மூலம் பிரச்சினை குறித்த முழு விவரமும், சிசிடிவி காட்சிகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.