STR 49-ல் 3 நடிகைகள்!.. அட அவரும் இருக்காராம்!.. நல்லா வாழ்றார் சிம்பு!..

by சிவா |
simbu
X

#image_title

STR49: கோலிவுட்டில் முக்கிய நடிகராக இருப்பவர் சிம்பு. ஆனால், ஷூட்டிங்கிற்கு சரியாக போகாமல் தன்னுடைய கெரியரை கெடுத்துக்கொண்டவர் இவர். எனவே, தொடர்ந்து படங்களில் நடிக்கமாட்டார். மாநாடு ஹிட் கொடுத்து 4 வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரை அடுத்த வெற்றிப்படத்தை அவர் கொடுக்கவில்லை.

மாநாடு படத்திற்கு பின் சிம்புவின் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. அதன்பின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

அறிவிப்பு வெளியானதே தவிர படம் நகரவில்லை. ஃபிரீ புரடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என சொன்னார்கள். அது ஒரு வருடம் நடந்தது. ஆனாலும் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. அதன்பின்னரே ஓடிடி நிறுவனங்கள் படங்களுக்கு கொடுக்கும் விலையை குறைத்துவிட்டதால் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் யோசிக்கிறது என்கிற செய்தி வெளிவந்தது.

ஏனெனில் இந்த படத்திற்கு தேசிங்கு பெரியசாமி சொன்ன பட்ஜெட் 150 கோடி. படம் சறுக்கிவிட்டால் அவ்வளவுதான் என யோசித்த கமல் ‘தம்பி இப்ப இது வேண்டாம். நீங்க நம்ம தக் லைப் படத்துல நடிங்க’ என சொல்லி சிம்புவை அதில் நடிக்க வைத்தார். பல வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமலும் இணைந்துள்ள இந்த அப்டத்தில் சிம்பு இணைந்திருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

kayadu

#image_title

இப்போது தக் லை படம் முடிந்துவிட்டது. மேலும், சிம்புவின் 49வது படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனும் 50வது படத்தை தேசிங்கு பெரியசாமியும், 51வது படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார் எனவும் செய்திகள் வெளியானது. இப்போது ராம்குமார் பட வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

mrunal

mrunal

இந்த படத்தில் கதாநாயகியாக டிராகன் படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ள கயாடு லோஹர் நடிக்கவிருக்கிறார். மேலும், பிரேமலு படம் மூலம் பிரபலமான மமிதா பைஜுவும் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம். இந்நிலையில், சீதா ராமம் படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் மிருனள் தாக்கூரையும் இந்த படத்தில் நடிக்க வைக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. இந்த படத்தில் சிம்பு ஒரு இளம் கல்லூரி பேராசிரியராக நடிக்கும் நிலையில், மிருனள் தாக்கூர் கல்லூரி பேராசியையாகவும் நடிக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது.

Next Story