திரையுலகிருந்து அரசியலில் நுழைந்து முதலமைச்சரானவர்கள் சிலர். அறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் மனைவி வி.என் ஜானகி, தெலுங்கு நடிகர் என்.டி.ராமராவ் என பெரிய பட்டியலே இருக்கிறது. அண்ணாவும், கருணாநிதியும் பல திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளனர். அண்ணாவின் ஓர் இரவு உள்ளிட்ட சில கதைகள் திரைப்படங்களாகவும் வெளிவந்துள்ளது.
அதேபோல் பராசக்தி உள்ளிட்ட படங்களுக்கு கருணாநிதி வசனம் எழுதியுள்ளார். எம்.ஜி.ஆர் நடித்த ராஜகுமாரி, அபிமன்யு, மருதநாட்டு இளவரசி, மந்திரி குமாரி ஆகிய படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். எனவே, எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் நண்பர்களாகத்தான் இருந்தனர். ஆனால், திமுகவில் இணைந்து எம்.ஜி.ஆர் செயல்பட்டு வந்த போது சில காரணங்களால் திமுகவிலிருந்து விலகி அதிமுக என்கிற அரசியல் கட்சியை எம்.ஜி.ஆர் உருவாக்கினார்.
இந்நிலையில், ஒரு திரைப்படத்தில் மூன்று முதல்வர்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றியுள்ளனர் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?. ஆனால், உண்மையில் அது நடந்தது. அந்த திரைப்படம்தான் மருதநாட்டு இளவரசி. இந்த படத்தில் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்திருந்தார். 1950ம் ஆண்டு வெளியான இந்த படத்தை காசிலிங்கம் என்பவர் இயக்கியிருந்தார். இப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக வி.என்.ஜானகி நடித்திருந்தார். இப்படத்திற்கு கருணாநிதி கதை வசனம் எழுதியிருந்தார். இந்த படம் எம்.ஜி.ஆருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதில் ஆச்சர்யம் என்னவெனில் இந்த படத்தில் பணிபுரிந்த எம்.ஜி.ஆர், அவரின் மனைவி வி.என் ஜானகி, கருணாநிதி ஆகிய மூவருமே பின்னாளில் தமிழ்நாட்டு முதலமைச்சராக மாறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாட்டுல எவ்ளவோ பிரச்சினை இருக்கு!. போவீங்களா!.. விஜய் பற்றிய கேள்விக்கு கடுப்பான மன்சூர் அலிகான்!…
தமிழ் சினிமாவில்…
மாநாடு படம்…
போடா போடி…
Viduthalai 2:…
விடுதலை 2…