Cinema News
தலைவரு நிரந்தரம்!.. நிரூபித்த ரஜினி!.. ஜெயிலர் 3 நாள் மொத்த வசூல் இத்தனை கோடியா?!…
சினிமா ரசிகர்கள் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி உலகமெங்கும் வெளியானது. அண்ணாத்த, தர்பார் போன்ற படங்கள் பெரிய வெற்றியை பெறாத நிலையில், கண்டிப்பாக ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்கிற நிலையில் இந்த படத்தில் ரஜினி நடித்தார்.
பீஸ்ட் படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற பின்னரும் நெல்சனை ரஜினி தேர்ந்தெடுத்தார். அதற்கு காரணம் நெல்சன் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்திருந்தது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. ரஜினிக்கு ஏற்ற ஒரு ஆக்ஷன் கதையை நெல்சன் உருவாக்கினார். அதில், மோகன்லால், ஷிவ் ராஜ்குமார், ஜாக்கி ஷெராப் என பலரையும் உள்ளே கொண்டு வந்து பேன் இண்டியா படமாகவும் மாற்றினார்.
இதையும் படிங்க: தலைவர் சொன்னதை ராகவா லாரன்ஸே கேட்கலயே!.. நெல்சனுக்கு கொடுத்த சரக்கு பார்ட்டி!…
ஒரு ஓய்வு பெற்ற ஜெயிலர் தனது மகனுக்காக என்னென்ன செய்கிறார் என்பதுதான் இப்படத்தின் ஒரு வரி கதை. ரஜினிக்கு தேவையான மாஸ் காட்சிகளை வைத்து, டெரர் வில்லனாக வினாயக்கை வைத்து திரைக்கதை எழுதியிருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை பெற்று வருகிறது.
படம் வெளியான அன்றே உலகம் முழுவதும் சேர்த்து கிட்டத்தட்ட இப்படத்தின் வசூல் ரூ.90 கோடியை எட்டியது. அடுத்தநாள் ரூ.60 கோடியும், 3ம் நாள் ரூ.50 கோடி வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில், படம் வெளியாகி 3 நாட்களில் இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.70 கோடியும், ஆந்திராவில் ரூ.25 கோடியும், கேரளாவில் ரூ.17.50 கோடியும், கர்நாடகாவில் ரூ.22.70 கோடியும், வட மாநிலங்களில் ரூ.5 கோடியும், வெளிநாடுகளில் ரூ.101 கோடி என மொத்தம் ரூ.241.25 கோடியை இப்படம் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.
இந்த வெற்றி ரஜினிக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: ரஜினி விஜய் ரெண்டு பேரையும் வச்சி!.. நெல்சனுக்கு வந்த விபரீத ஆசை!. வொர்க் அவுட் ஆகுமா?!..