வாலி வாய்ப்பு தராத மூன்று பேர்.. பின்னாளில் சினிமாவில் பெரிய பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா?...

திரையுலகை பொறுத்தவரை வாய்ப்பு என்பது அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. திரையுலக பின்னணி இல்லையேல் படாதாபடு பட வேண்டும். தங்கும் அறைக்கும், உணவுக்கும் கூட பணமில்லாமல் போகும். எங்கு சென்றாலும் வாய்ப்பு கிடைக்காது. அவமானங்களை சந்திக்க வேண்டியிருக்கும். யார் மூலமாவது வாய்ப்பு கிடைத்தாலும் அங்கே நம்மை கீழே தள்ளிவிடவும், நமது வாய்ப்பை தட்டிப்பறிக்கவும் பலரும் காத்திருப்பார்கள்.

அவர்களை சமாளிக்க வேண்டும். நல்ல வாய்ப்பு கிடைக்கும்போது சரியாக பயன்படுத்தி மேலே வரவேண்டும். அதுவும் இயக்குனர்களிடமோ, நடிகர்களிடமோ, பாடலாசியர்களிடமோ உதவியாளராக சேர்வது என்பது மிகவும் கடினம். சினிமாவை பொறுத்தவரை எல்லாமே சிபாரிசில் மட்டுமே நடக்கும்.

vaali1

vaali1

தமிழ் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு மேலே வந்தவர் கவிஞர் வாலி. வாய்ப்பு தேடிய காலத்தில் வருடத்திற்கு வெறும் 4 பாடல்களை மட்டுமே கூட அவர் எழுதியுள்ளார். அதன்பின் அவர் எழுதிய பாடல்கள்கள் மூலம் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்து எம்.ஜி.ஆரின் ஆஸ்தான பாடலாசிரியராகவும் அவர் மாறினார். எம்.ஜி.ஆர் - சிவாஜிக்கு பல நூறு தத்துவ மற்றும் காதல் பாடல்களை வாலி எழுதியுள்ளார்.

கவிஞர் கண்ணாதாசனுக்கே போட்டியாக இருந்தார். ஆனால், கண்ணதாசன் போல் வாலி உதவியாளர்களை வைத்துக்கொள்ளவே இல்லை. அவரே எழுதி விடுவார். அவரிடம் உதவியாளராக சேர பலர் முயன்றும் மறுத்துவிட்டார். ‘நான் உதவியாளர்களை வைத்துக்கொண்டால் நான் எழுதிய பாட்டை வெளியே சென்று நான்தான் எழுதியது என சொல்வான். எனவே நான் உதவியாளர்களை வைத்துக்கொள்ளவில்லை’ என பேட்டியே கொடுத்திருக்கிறார்.

ramanarayanan

வாலியிடம் உதவியாளராக சேர அவருக்கு மூன்று பேர் தொடர்ந்து கடிதம் எழுதி வந்தனர். ஒருவர் திருவல்லிக்கேணியில் மெடிக்கல் ஷாப் வைத்திருந்த இளைஞர், மற்றொருவர் அப்போது நடன இயக்குனராக இருந்த தங்கப்பன் என்பவரிடம் இருந்தவர், அதேபோல் கிராமத்தில் இருந்து ஒருவர் என அவர்கள் மூன்று பேரும் வாலிக்கு கடிதம் எழுதி வந்தனர். ஆனால், வாலி அவர்களுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. அவர்களை உதவியாளராக சேர்த்துக்கொள்ளவுமில்லை.

rc sakthi

ஆனால், தங்களின் முயற்சியால் அந்த மூவரும் பல வருடங்கள் கழித்து பிரபலமான இயக்குனர்களாக மாறினார். மருந்துகடை வைத்திருந்தவர் இராம நாராயணன். இவர் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்தவர். 100 படங்களை இயக்கி சாதனை படைத்தவர்.

gangai amaran

gangai amaran

தங்கப்பனிடம் இருந்தவர் இயக்குனர் ஆர்.சி.சக்தி. கமலின் குட்புக்கில் இருந்தவர். கமலை வைத்து படமும் இயக்கியுள்ளார். கிராமத்திலிருந்து கடிதம் எழுதியவர் கங்கை அமரன். இளையராஜாவின் சகோதரர். பின்னாளில் இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பல அவதாரங்களை எடுத்தவர்.

 

Related Articles

Next Story