Connect with us
shankar

Cinema News

இந்தியன் 2-வில் மேலும் மூன்று இயக்குனர்கள்….ஷங்கர் பிளான் வொர்க்-அவுட் ஆகுமா?….

லைக்கா தயாரிப்பில் ஷங்கர் இயக்க கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்து துவங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் கடந்த சில வருடங்களாக கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கிறது.

shankar

3 வருடங்களுக்கு முன்பே இப்படத்திற்காக பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு துவங்கியது. படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு 3 பேர் மரணமடைந்தது, கமலுக்கும், லைக்காவும் இடையே மற்றும் ஷங்கருக்கும், லைக்காவுக்கும் இடையே சில பிரச்சனைகள் இப்படம் பல காரணங்களால் தள்ளிப்போனது. கமல் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் மெகா ஹிட் ஆகியுள்ளதால், தற்போது இந்தியன் 2 திரைப்படம் சூடு பிடித்துள்ளது.

தெலுங்கில் ராம்சரணை வைத்து ஏற்கனவே ஒரு திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில், ஒரேநேரத்தில் இரண்டு படங்களை இயக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார். எனவே, தன்னிடம் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்து அதன்பின் இயக்குனர்கள் மாறிய அறிவழகன், வசந்தபாலன் மற்றும் சிம்புதேவன் ஆகியோரை இப்படத்தில் பணிபுரிய ஷங்கர் அழைத்துள்ளாராம். கமல் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் ஷங்கர் எடுப்பார் எனவும், மற்ற நடிகர், நடிகைகள் நடிக்கும் காட்சிகளை அவர்கள் மூவரும் எடுப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

இந்தியன் 2 படத்திற்காக மாதத்தில் 10 நாட்கள் கால்ஷிட் கொடுக்கிறேன் படத்தை முடித்துவிடுங்கள் என ஷங்கரிடம் கமல்ஹாசன் கூறியுள்ளாராம்.

google news
Continue Reading

More in Cinema News

To Top