சிவகார்த்தியேனுக்கு கோடிகளை கொட்டி கொடுத்த 3 படங்கள்!.. 100 கோடி வசூலை தொட்ட டான்!...

Sivakarthikeyan: டிவியில் ஆங்கராக இருந்து மெரினா திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர் சிவகார்த்திகேயான். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றி அவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. அதற்கு பின் வந்த ரஜினி முருகன் படமும் சூப்பர் ஹிட் அடித்து சிவகார்த்திகேயனை ஒரு முன்னணி நடிகராக மாற்றியது.
மிகவும் குறுகிய கால கட்டத்தில் விஜய், அஜித்துக்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகராக வளர்ந்தார். விக்ரம், விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், சிம்பு ஆகியோரை விட அதிக சம்பளம் வாங்கினார். இது சக நடிகர்களை காண்டாக்கியது. நடிப்பதோடு நின்றுவிடாமல் சொந்தமாக படங்களை தயாரிக்க துவங்கினார்.
அங்குதான் அவருக்கு ஏழரை துவங்கியது. ரெமோ, சீம ராஜா போன்ற படங்களால் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 100 கோடி கடனாளி ஆனார். இதனால் சில படங்களில் சம்பளம் வாங்காமல் நடிக்கும் நிலையும் அவருக்கு ஏற்பட்டது. கடைசியாக வெளிவந்த அயலான் படத்திற்கும் அவர் சம்பளம் வாங்கவில்லை. அந்த படத்தோடு அவரின் கடன்கள் முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், சிவகார்த்திகேயனுக்கு லாபத்தை கொடுத்த சில படங்களை இங்கே பார்ப்போம். நெல்சன் இயக்கத்தில் உருவான திரைப்படம்தான் டாக்டர். முதன் முறையாக லொடலொடவென சிவகார்த்திகேயன் பேசாமல் நடித்த திரைப்படம் இது. பிரியங்கா மோகன் இப்படத்தில் அறிமுகமானார். 40 கோடியில் உருவான இப்படம் 100 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.
அதேபோல், சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா என பலரும் நடித்து வெளியான டான் படம். லைக்கா நிறுவனத்தோடு இணைந்து இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். சுமார் 38 கோடியில் உருவான இந்த படமும் நல்ல வசூலை பெற்று 100 கோடி வசூல் செய்தது.
மேலும், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம்தான் கனா. ஐஸ்வர்யா ராஜேஷ், சத்தியராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் கிரிக்கெட் கோட்ச்சாக நடித்திருந்தார். 6 கோடியில் உருவான இந்த திரைப்படம் 12 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.