ரீ-ரிலீஸாகும் அஜித்தின் 3 படங்கள்!.. தல பிறந்தநாளுக்கு செம ட்ரீட் இருக்கு!.. ரெடியா இருங்க ஃபேன்ஸ்..

ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படங்களை சில வருடங்கள் கழித்து மீண்டும் வெளியிடுவதைத்தான் ரீ-ரிலீஸ் என சொல்கிறார்கள். இதற்கு விதை போட்டவர் எம்.ஜி.ஆர்.தான். அவரின் பல திரைப்படங்கள் பலமுறை ரீ-ரிலீஸ் ஆகியிருக்கிறது. குறிப்பாக, ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண், எங்க வீட்டு பிள்ளை போன்ற படங்கள் எத்தனை முறை டூரீங் டாக்கிஸ் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படிருக்கும் என கணக்கிடவே முடியாது.

அவ்வளவு ஏன்?.. இப்போது கூட எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண் திரைப்படம் தமிழகத்தின் சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் விஜயின் கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. தயாரிப்பாளரே எதிர்பார்த்திராத வகையில் இப்படம் 17 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

இதையும் படிங்க: பழனிக்கே பால் காவடி எடுத்தாலும்!.. கில்லி ரீ ரிலீஸ் முதல் நாள் வசூலை முந்தாத விஷாலின் ரத்னம்!..

இந்த படம் வெளியான பின் வெளியான ரோமியோ, ரத்னம் ஆகிய படங்கள் வசூலை பெறவில்லை. ஆனால், கில்லி படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து விஜயின் குஷி படமும் அடுத்த மாதம் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது. விஜய் படம் ஓடினால் சும்மா இருப்பாரா அஜித்?..

பொதுவாக விஜய் ஒன்று செய்தால் அஜித் உடனே ஒன்று செய்வார். அதாவது, விஜய் தொடர்பான விஷயம் ஒன்று பரபரப்பாக பேசப்பட்டால் அஜித் உடனே தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு விஜய் தொடர்பான செய்தியை மழுங்கடிப்பார். அஜித் பற்றிய ஒரு செய்தி வெளியானால் விஜய் தரப்பும் இதைத்தான் செய்யும்.

இதையும் படிங்க: விஜய்யை விட நான் சின்ன பொண்ணா?.. வயதை வெளிப்படையாக சொன்ன கில்லி அம்மா!..

இப்போது கில்லி ரீ-ரிலீஸ் ஹிட் அடித்திருகும் நிலையில், அஜித்தின் ஆசையோ, அல்லது அவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்களின் ஆசையோ!.. அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி அவர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த காதல் மன்னன், பில்லா, மங்காத்தா ஆகிய 3 படங்களை களம் இறக்க போகிறார்களாம்.

கில்லி படத்தை போல இந்த படங்களும் வசூலை அள்ளும் என அப்படங்களின் தயாரிப்பாளர்கள் கணக்கு போடுகிறார்கள். அஜித்தின் 3 படங்கள் ஒரேநாளில் வெளியாவதால் இந்த வருடம் அஜித்தின் பிறந்தநாள் அவரின் ரசிகர்களுக்கு திருவிழாவாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

 

Related Articles

Next Story