ரீ ரிலீஸாகும் 3 படங்கள்!.. இப்படி பிறந்தநாள் ட்ரீட் கொடுக்கிறாரே தளபதி!.. பி ரெடி ஃபேன்ஸ்!..
பொதுவாக ஒரு பெரிய நடிகரின் பிறந்தநாள் எனில் அவர் நடிக்கும் படங்கள் தொடர்பான அப்டேட்டுகள் வெளியாகும். ஃபர்ஸ்ட் லுக், டீசர், டிரெய்லர் அல்லது பாடல் வீடியோக்கள் என எதையாவது வெளியிட்டு அந்த நடிகரின் ரசிகர்களை குஷிப்படுத்துவார்கள். கடந்த சில வருடங்களாக இது அதிகரித்துவிட்டது.
முன்பெல்லாம் நடிகர்களின் பிறந்தநாளில் அவரை அவரின் ரசிகர்கள் சந்திப்பார்கள். அவர்களோடு அந்த நடிகர் புகைப்படம் எடுத்துக்கொள்வார். பத்திரிக்கைகளில் அந்த நடிகரை வாழ்த்தி சினிமா உலகில் பலரும் வாழ்த்து செய்தி சொல்லி இருப்பார்கள். அதேபோல், அந்த நடிகரின் புதிய படங்கள் பற்றிய அறிவிப்பு போஸ்டரோடு வெளியாகும்.
இதையும் படிங்க: இவங்க இல்லைனா அதோ கதிதான்.. எங்க போனாலும் நயனை ஃபாலோ செய்யும் அந்த மூணு நபர்
இப்போது எல்லாம் சமூகவலைத்தளங்களுக்கு மாறிவிட்டது. தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்டிருப்பவராக விஜய் இருக்கிறார். இவரின் பிறந்தநாள் என்றாலே அவரின் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். இப்போது விஜய் வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். வருகிற 22ம் தேதி அவர் தனது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார்.
ஏற்கனவே இப்படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘விசில் போடு’ பாடல் வெளியானது. இந்நிலையில், விஜயின் பிறந்தநாளன்று கோட் படத்தின் 2வது பாடல் வெளியாகவிருக்கிறது. அதோடு, ஏற்கனவே விஜயின் கில்லி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு 20 கோடி வரை வசூல் செய்ததால் விஜய் பிறந்தநாளுக்கு 3 படங்களை வெளியிட்ட திட்டமிட்டிருக்கிறது திரையுலகம்.
ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து பகவதி, பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்த போக்கிரி மற்றும் கில்லி பட இயக்குனர் தரணி இயக்கி வெளியான குருவி ஆகிய 3 படங்கள் ஜூன் 21ம் தேதி தமிழகத்தின் பல தியேட்டர்களிலும் வெளியிட்ட திட்டமிட்டிருக்கிறார்கள்.
அதிலும், போக்கிரி படத்தை தொழில் நுட்பம் மூலம் பொலிவுபடுத்தி புதிய படம் போல வெளியிடவிருக்கிறார்கள். எனவே, இந்த பிறந்தநாள் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். அதேநேரம், இந்த மூன்று படங்களும் கில்லி படம் போல வசூல் செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.