ரஜினி நடித்து வெளிவராமல் போன மூன்று படங்கள்!.. சூப்பர்ஸ்டாருக்கே இந்த நிலையா?…

Published on: December 12, 2023
rajini
---Advertisement---

Actor rajini: திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் ரஜினி. ஷாருக்கான் போன்ற பாலிவுட் சூப்பர்ஸ்டார்கள் முதல், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் வரை ரஜினியை ‘தலைவா’ என்றே அழைக்கிறார்கள். இந்திய சினிமா உலகில் ரஜினிக்கு முன், ரஜினிக்கு பின் என எவ்வளவோ நடிகர்கள் வந்துவிட்டாலும் ‘தலைவர்’ என்றால் அது ரஜினியை மட்டுமே குறிக்கிறது. அதுதான் சினிமா மூலம் ரஜினி அடைந்த இடம்.

இதற்கு பின்னால் ரஜினியின் பல வருட உழைப்பு இருக்கிறது. ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமாகி சின்ன சின்ன வேடங்களில் நடித்து ஹீரோவாக மாறியவர் இவர். ஹீரோவாக மாறிய பின் ரஜினி நடித்து அனைத்து படங்களுமே ஹிட்தான். ரஜினி படத்தால் தயாரிப்பாளரோ, வினியோகஸ்தர்களோ, தியேட்டர் அதிபர்களோ நஷ்டம் அடைந்தது இல்லை என்பதுதான் அவரின் வரலாறு.

இதையும் படிங்க: ரஜினி தன் வாழ்க்கையில் வாங்கிய முதல் சம்பளம்!.. அத எப்படி செலவு செய்தார் தெரியுமா?!..

70 வயதிலும் ஜெயிலர் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துவிட்டாக நான்தான் சூப்பர்ஸ்டார் என கெத்தாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என எந்த மொழியில் எடுத்துகொண்டாலும் இந்த வயதில் இப்படி ஒரு ஹிட் கொடுக்கும் நடிகர் யாருமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

rajini
rajini

ரஜினி படம் என்றாலே துவங்கினால் எந்த பிரச்சனையும் இல்லாமல் முடிந்துவிடும். ஆனால், அவர் நடித்தும் வெளிவராத 3 படங்கள் பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம். பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினி நடித்த திரைப்படம்தான் தில்லு முல்லு. இதை தெலுங்கில் ரஜினி நடிக்க ‘மீசம் கோஷம்’ என்கிற பெயரில் உருவானது. ஆனால், இந்த படம் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: ரஜினியிடம் சிவாஜி கேட்ட அந்த கேள்வி!.. ஆடிப்போன சூப்பர் ஸ்டார்!.. நடந்தது இதுதான்!..

அடுத்து, ரஜினி நடித்து உருவான ‘ நாட்டுக்கொரு நல்லவன்’ திரைப்படம் ஹிந்தியில் ‘ஷாந்தி கிராந்தி’ என்கிற பெயரில் எடுக்கப்பட்டது., ஆனால், இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. அதேபோல், ரஜினி குணச்சித்திர வேடத்தில் நடித்த ‘ஒரு மனைவி உருவாகிறாள்’ திரைப்படமும் கடைசிவரை ரிலீஸ் ஆகவில்லை.

இப்படி ரஜினி நடித்தும் 3 திரைப்படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. அதேபோல், ஜில்லா கலெக்டர், வாடா மன்மதா, ஜக்கு பாய், ராணா ஆகிய படங்கள் வெறும் அறிவிப்போடு நின்று போனது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சம்பளமே வாங்காம ரஜினி நடிச்ச படம்!.. இனிமே அப்படி ஒரு பாட்டு அமையவே அமையாது!..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.