எம்ஜிஆருக்கு முன் வரை தமிழக அரசியலில் நடிகர்கள் பெரிதாக யாரும் ஈடுபடவில்லை. ஒரு கட்சி ஆதரிப்பதோடு நிறுத்திக் கொள்வார்கள். எம்.ஜி.ஆர் கூட பல வருடங்கள் திமுகவை ஆதரித்து வந்தவர்தான். அந்த கட்சியில் முக்கிய பொறுப்பிலும் இருந்தார். திமுகவிலிருந்து அவர் நீக்கப்படவே அதிமுக என்கிற கட்சியை துவங்கி தனியாக செயல்பட தொடங்கினார். அவருக்கு இருந்த சினிமா கவர்ச்சி அவரை மூன்று முறை முதல்வராக மாற்றியது.
ஆனால் அந்த மேஜிக் எல்லோருக்கும் நடந்து விடும் என சொல்ல முடியாது. எம்ஜிஆருக்கு பின் அரசியல் கட்சி துவங்கிய நடிகர் திலகம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனால் வெற்றிபெற முடியவில்லை. அரசியலை புரிந்துகொண்டு கட்சியையை கலைத்தார். அதேபோல் பாக்கியராஜ், சரத்குமார், கார்த்திக், நெப்போலியன் உள்ளிட பல நடிகர்களும் அரசியலுக்கு வந்தாலும் அரசியலில் பெரியளவு போகவில்லை.
நடிகரானபின் அரசியல் கட்சி தொடங்கி ஓரளவுக்கு தாக்குப்பிடித்தவர் விஜயகாந்த் மட்டுமே. அவர் மட்டுமே எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தார். உடல்நிலை காரணமாக தொடர்ந்து அவரால் அரசியலில் ஈடுபடமுடியாமல் போனது.
ஆனாலும் நடிகர்களுக்கு நாடாளும் ஆசை விடுவதாக இல்லை. விஜயகாந்துக்கு முன்பே பல வருடங்களாக அரசியலுக்கு வர போவதாக சொல்லிக்கொண்டிருந்த ரஜினி அதிலிருந்து பின்வாங்கினார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சியை தொடங்கினார். அவராலும் அதில் பெரிதாக சாதிக்க முடியவில்லை. தற்போது நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி 2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்திருக்கிறார்.
இன்னும் ஒரு தேர்தலில் கூட அவரின் கட்சி போட்டியிடாத நிலையில் அவர்தான் தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றுப்போவது போல மேடைகளில் பேசிக் கொண்டிருக்கிறார். திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில்தான் பல வருடங்களுக்கு முன்பு இயக்குனர் பாரதிராஜ நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
ஒரு நடிகனுக்கு அரசியல் ஈடுபட என்ன தகுதி இருக்கு? இந்த நாட்டில் எத்தனை நதிகள் ஓடுதுன்னு சொல்ல சொல்லுங்க?.. எத்தனை நதிகள் வறண்டு காணாமல் போச்சுன்னா அவங்களுக்கு தெரியுமா?.. இந்தியாவில் எத்தனை அணைகள் இருக்குன்னு கேட்டு பாருங்க.. வட இந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் கலாச்சார ரீதியா என்ன வேறுபாடுன்னு தெரியுமா?.. இதெல்லாம் அவங்க கிட்ட கேளுங்க.. சும்மா நாலு ரசிகர் மன்றத்தை வைத்து 50 பேருக்கு தையல் மெஷின் வாங்கி கொடுத்துட்டா அரசியலுக்கு வந்தரலாமா?.. வாட் இஸ் திஸ்?..
எனக்கு எந்த பயமும் இல்லை.. நேத்து சினிமாவுல நடிக்க வந்துட்டு நாளைக்கு முதலமைச்சர் ஆக ஆசைப்படக்கூடாது. குறைந்தபட்சம் முனிசிபாலிட்டி, பஞ்சாயத்து தேர்தலில் நின்னு ஜெயிச்சுட்டு அப்புறம் அரசியல் கட்சியில் சேர்ந்து மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யட்டும்’ என பேசி இருந்தார் பாரதிராஜா.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…