துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கி ஆரம்ப கட்டத்திலேயே தன்னை ஒரு சிறந்த நடிகராக வெளிப்படுத்தியதோடு, ஒரு பக்கம் கமர்சியல் மசாலா திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் தனுஷ். ஜனரஞ்சகமான படங்களை நடித்தாலும் அவ்வப்போது ஆடுகளம் அசுரன், கர்ணன், குபேரா போன்ற படங்களில் நடித்து தான் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் நிரூபித்து வருகிறார். இரண்டு முறை தேசிய விருதும் வாங்கியிருக்கிறார்.
ஒரு பக்கம் நடிகராக மட்டுமின்றி பாடலசிரியர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்களையும் எடுத்திருக்கிறார் தனுஷ். இதுவரை 4 திரைப்படங்களை அவர் இயக்கியுள்ளார். மேலும் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மற்றும் சில ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார். அவரின் நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்தி படமான Tere Ishk Mein படம் இன்று உலகமெங்கும் ரிலீசாகிறது.
இந்நிலையில் தனுசுடன் தொடரி படத்தில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனுஷ் பற்றிய ஒரு தகவலை பகிர்ந்துகொண்டார். தனுஷ் சாரிடம் ஒருமுறை நான் பேசிக் கொண்டிருந்தபோது ‘சார் நீங்க ஹாலிவுட் வரைக்கும் போயிட்டீங்க.. சினிமாவுல நீங்க கடந்து வந்த பாதையில் இருந்து ஹாலிவுட் வரைக்கும் உங்களுக்கு கிடைத்த அனுபவங்களை ஒரு புத்தகமா எழுதலாமே’ன்னு கேட்டேன்.
அதற்கு அவர் ‘ புத்தகம் எழுதிட்டோம்னா நாம எல்லாத்தையும் சாதிச்சிட்ட மாதிரி ஆயிடும்.. புத்தகம் எழுதற அளவுக்கு நாம இன்னும் ஒன்று சாதிக்கல’ என சொன்னார். அவரே அப்படி சொல்லும் போது நாம கத்துக்க வேண்டிய விஷயம் ரொம்ப இருக்கு என எனக்கு புரிஞ்சது’ என சொல்லி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்…
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…