Categories: latest news throwback stories

kuruthipunal: கமல் -பி.சி.ஸ்ரீராம் செய்த மேஜிக்…30 வருடங்களை நிறைவு செய்த குருதிப்புனல்

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1995ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி தீபாவளி வெளியீடாக வந்த பாட்ம் குருதிப்புனல். கமலுடன் அர்ஜூன் , நாசர் , கௌதமி என முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மறைந்த மகேஷ் இசையமைத்திருந்த இப்படத்தினை பி.சி.ஸ்ரீராம் இயக்கியிருந்தார். இந்த படத்தில்தான் முதன்முறையாக தமிழில்  டால்பி ஒலிநுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்படத்தின் சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் தங்களை மிகவும் பாதித்ததாக இயக்குநர்கள் கௌதம் மேனனும் ஏ.ஆர்.முருகதாஸூம் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்கள். அந்த அளவிற்கு சண்டை காட்சிகள் யதார்தமாக எடுக்கப்பட்டிருக்கும்.

தீவிரவாதிகளுக்கும் காவல்துறையினருக்கும் இயையான போராட்டமே படத்தின் மையக்கருவாக இருந்தது.கமலஹாசன், அர்ஜூன் இருவரும் காவல்துறை அதிகாரிகளாக நடித்திருந்தனர். தீவிரவாத குழுவில் வேவு பார்க்க செல்லும் நபர்களாக இருவரும் நடித்திருந்தனர். அனல்பறக்கும் வசனங்கள் இப்படத்தில் இடம்பெற்றிருந்தன. ஆங்கில படங்களுக்கு நிகராக இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.  சொல்ல போனால் கமலும் பி.சி.ஸ்ரீராமும் இணைந்து ஒரு ஸ்டைலிஷான படமாக மேஜிக் செய்திருந்தனர்.

பாடல்களே இல்லாமல் வெளியான இப்படம் அப்போது ஆஸ்கார் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படம் இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இன்னும் எந்தனை வருடங்கள் ஆனாலும் இப்படம் பேசப்படும் படமாகவே இருக்கும் என்பது உண்மை.

Published by
ராம் சுதன்