Categories: mgr sivakumar throwback stories

Sivakumar: எம்ஜிஆர் கொடுக்கும் விருது.. அதே நேரம் வேறொரு பட சூட்டிங்.. நிலமையை சமாளித்த சிவக்குமார்

சிவக்குமார்;

தமிழ் சினிமாவில் ஒழுக்கத்திற்கு பேர் போன நடிகர் என்றால் அனைவரும் உச்சரிப்பது சிவக்குமாரின் பெயரைத்தான். ஆனால் சமீபகாலமாக சிவக்குமார் என்றால் கோபக்காரர், திமிருபிடித்தவர் என்றுதான் அர்த்தம் என்பதை போல் அவருடைய  நடவடிக்கைகள் ரசிகர்களை யோசிக்க வைத்தது. ஆனால் அவருக்குள் வேறொரு முகம் இருக்கிறது என்பதை பிரபல சினிமா தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

சிவக்குமாரை பொறுத்தவரைக்கும் மிகவும் கண்டிப்பான பேர் வழிதான். எல்லாவற்றிலும் டிசிபிளினை எதிர்பார்ப்பவர். ஒழுக்கத்தை கடைப்பிடிப்பவர். அதனால்தான் அவருடைய இரு மகன்களையும் இன்று ஒட்டுமொத்த தமிழகமுமே ஆச்சரியமாக பார்க்கிறார்கள். கார்த்தியை பொறுத்தவரைக்கும் எந்த கெட்டப்பழக்கத்திற்கும் ஆளாகதவர். இன்னொரு பக்கம் சூர்யா பல்வேறு மாணவர்களை அதிகாரிகளாக உருவாக்கிக் கொண்டு வருகிறார்.

எம்ஜிஆர் தலைமையில் விழா;

இந்த நிலையில் தயாரிப்பாளரிடமும் சிவக்குமார் எப்படி நடந்து கொள்வார் என்பதை விளக்கும் விதமாக ஒரு சம்பவத்தை பாலாஜி பிரபு கூறியுள்ளார். பாலாஜி பிரபுவின் தந்தையும் ஒரு இயக்குனர்தான். பாஸ்கர் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு சிவக்குமார் நடிப்பில் வெளிவந்த படம்தான் பௌர்ணமி அலைகள். இந்தப் படத்தை பாஸ்கரே எழுதி இயக்கி தயாரித்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்றது.

முதல் நாள் ஷூட்டிங். ஊட்டியில் படப்பிடிப்பு. அதனால் சிவக்குமார் முக்கிய நடிகர் என்பதால் அவருக்கு மட்டும் கோவை வரைக்கும் ஃபிளைட் டிக்கெட் போட்டு அவரிடமும் தகவல் சொல்லப்பட்டு விட்டது. அதே நேரம் படப்பிடிப்பிற்கு முந்தைய நாள் சிந்து பைரவி படத்தின் வெற்றிவிழா. எம்ஜிஆர் தலைமையில் நடக்க இருக்கிறது. இது சிவக்குமாருக்கு மூன்று நாள்களுக்கு முன்புதான் தெரியவந்திருக்கிறது. சிந்து பைரவி படத்தை பாலச்சந்தர்தான் தயாரித்தார்.

கன்வின்ஸ் ஆகாத ஆளு:

அதனால் சிவக்குமார் தனது மேனேஜரை விட்டு இந்த மாதிரி முதல் நாள் விழாவில் கலந்து கொள்ள இருப்பதால் இரண்டாவது நாள் ஷூட்டிங்கிற்கு வந்து விடுகிறேன், அதற்கு அனுமதி வேண்டும் என சொல்லி அனுப்பியிருக்கிறார். ஆனால் பாஸ்கரை பொறுத்தவரைக்கும் படப்பிடிப்பு தேதி ஓகே ஆகிவிட்டால் எதிலும் கன்வின்ஸ் ஆகவே மாட்டாராம். அதனால் அனுமதி கொடுக்க முடியாது என சொல்லி அனுப்பிவிட்டாராம் பாஸ்கர்.

இதை அந்த மேனேஜர் சிவக்குமாரிடம் சொல்ல, சிவக்குமாருக்கு என்ன வருத்தம் என தெரியவில்லை. அந்த ஃபிளைட் டிக்கெட்டை அதே மேனேஜரிடம் கொடுத்து அனுப்பியிருக்கிறார். இதற்கு அர்த்தம் வர முடியாது என்பதை புரிந்து கொண்ட பாஸ்கர், என்ன ஆனாலும் பரவாயில்லை. சொன்ன தேதியில் சிவக்குமார் வர வேண்டும். அப்புறம் நடக்குறதே வேற என சொல்லி அனுப்பினாராம். அதே நேரம் படப்பிடிப்பிற்கான வேலைகளையும் பாஸ்கர் பார்க்க ஆரம்பித்துவிட்டாராம்.

பரபரவென ஓடி வந்த சிவக்குமார்;

அங்கு சிந்து பைரவி விழா. மாலை 6  மணிக்கு நடக்கிறது. சிவக்குமார் , எனக்கு முதலில் எம்ஜிஆரை கேடயம் கொடுக்க சொல்லி என்னை அனுப்பி விடுங்கள் என கூற 7 மனிக்கு கேடயத்தை வாங்கி கொண்டு சென்னையில் இருந்து காரிலேயே கோயம்புத்தூருக்கு புறப்பட்டு சென்றிருக்க்கிறார் சிவக்குமார். அங்கு காலை 6 மணியிலிருந்து சிவக்குமார் வரவில்லை என நினைத்து பாஸ்கர் டென்ஷனிலேயே சிகரெட்டை பிடித்து  கொண்டிருக்க சரியான 6.50க்கு சிவக்குமார் கார் வந்திருக்கிறது. வந்ததும் மேக்கப் அறைக்குள் சென்று ஷாட்டுக்கு தயாராகி வந்துவிட்டாராம் சிவக்குமார். ஆனால் இன்றைய கால நடிகர்கள் அப்படி இருப்பார்களா? உன் படமும் வேண்டாம், எதுவும் வேண்டாம் என சொல்லிவிட்டு சென்ற நடிகர்கள் ஏராளம். ஆனால் சிவக்குமார் அப்படி கிடையாது என பாலாஜி பிரபு கூறினார். 

Published by
ராம் சுதன்