கைவிட்ட திரையுலகம்… மதுவால் உயிரிழந்த பி.யூ.சின்னப்பா மகன்

Published on: December 5, 2025
---Advertisement---

தமிழ் சினிமாவில் முதல் ஆக்சன் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் பி.யூ.சின்னப்பா. புதுகோட்டையில் 1916ம் ஆண்டு பிறந்த அவர் தமிழ் திரையுலகில் நடிகர், பாடகர் , தயாரிப்பாளர் என பல அவதாரங்கள் எடுத்தவர்.

முதன் முதலில் ஜூபிட்டரின் சவுக்கடி சந்திரகாந்தா மூலம் திரைப்படத்துறையில் அறிமுகம் ஆனார் சின்னப்பா. தொடர்ந்து பஞ்சாப் கேசரி , அனாதைப் பெண் , யயாதி போன்ற படங்களில் நடித்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் டி. ஆர். சுந்தரம் தயாரிப்பில் உத்தம புத்திரன் என்ற படத்தில் இரட்டை வேடத்தில் சின்னப்பா நடித்தார். தமிழில் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த பெருமைக்குரியவர் இவரே. பிற்காலத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் உத்தம புத்திரன் என்ற படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1944 ஆம் ஆண்டில் பிருத்விராஜ் படத்தில் தன்னுடன் நடித்த ஏ. சகுந்தலா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ராஜாபகதூர் என்ற பெயரில் ஒரு மகனும் உண்டு.

புதுக்கோட்டையில்பல் வீடுகள், தோட்டங்கள் என வாங்கி குவித்தார் சின்னப்பா. ஒரு கட்டத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் இனி நீங்கள் எந்த சொத்தும் வாங்கக்கூடாது என்று தடை போட்டதாகவும் கூறப்படுகிறது. இளம் வயதிலேயே திடீரென ரத்த வாந்தி எடுத்து பி.யூ.சின்னப்பா அகால மரணம் அடைந்தார். இவரது மரணத்திற்கு பின் அவரது குடும்பம் வறுமை நிலைக்கு தள்ளப்படுகிறது. காரணம் இவரது சொத்துக்கள் அனைத்தும் பினாமிகள் பெயரில் இருந்தது. இதில் பலபேர் சொத்துக்களை திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது.

p u chinnappa

பி.யூ.சின்னப்பா மகன் ராஜா பகதூர்  நடிகர் விணுசக்கரவர்த்தியின் கதையில் உருவான ‘கோயில் புறா என்ற படத்தில் நாயகனாக நடித்தார். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே கிடைக்கும் வேடத்தில் நடித்தார். சிவாஜி, ஜெய்சங்கர் போன்ற நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்தார். கரகாட்டகாரன் படத்தில் கறிக்கடை வைத்திருப்பவராக நடித்திருப்பார் இவர். தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் இல்லாததால் இவரும் மதுவுக்கு அடிமையாக இருந்தார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு தந்தையைபோலவே குறைந்த வயதிலேயே உயிரிழந்தார். தற்போது இவரது மனைவி சத்துணவு ஆசிரியராக பணியாற்றுகிறார் என்பது குறிப்படத்தக்கது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment