1. Home
  2. Throwback stories

Flashback: 2001ம் ஆண்டு தீபாவளி படங்கள் ஒரு பார்வை...

2001 diwali
கடந்த 2001ம் ஆண்டு தீபாவளி அன்று வெளியான 8 படங்களும் அதில் வெற்றி பெற்றது யார் என்றும் இங்கு பார்க்கலாம்.

அப்போதெல்லாம் தீபாவளி , பொங்கல் என்றாலே சினிமா ரசிகர்களூக்கு கொண்டாட்டம்தான். காரணம் இப்போது உள்ளது போல ஒன்று அல்லது இரண்டு படங்கள் வெளியாகாது. ரஜினி, கமல், விஜயகாந்த் என அனைத்து முன்னணி ஹீரோக்கள் படங்கள் வெளியாகும். ரசிகர்களும் தங்களது ஹீரோக்கள் படங்களை போட்டி போட்டு பார்ப்பார்கள். 

அந்த வகையில் கடந்த 2001ம் ஆண்டு தீபாவளி அன்று வெளியான 8 படங்களும் அதில் வெற்றி பெற்றது யார் என்றும் இங்கு பார்க்கலாம்.

1. ஆளவந்தான்

கலைப்புலி தாணு தயாரிப்பில் கமல்ஹாசன் இரு வேடங்களில் நடித்து வெளியான படம் ஆளவந்தான். சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும் இப்படத்தில் ரவீனா டண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆனால் இந்த படம் ரசிர்களை பெரிதும் ஏமாற்றியது. படம் மிகப்பெரிய தோல்வியாகவே அமைந்தது.

2. தவசி

விஜயகாந்த் இரு வேடங்களில் நடித்து வெளியான படம் தவசி. சௌந்தர்யா, வடிவேலு, வடிவுக்கரசி என பல் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையில் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடித்திருந்தது. மேலும் வடிவேலிவின் காமெடியும் இப்படதிற்கு பக்கபலமாக் இருந்தது. குடும்ப செண்டிமெண்ட், காமெடி , பாடல்கள் என புல் பேக்கேஜாக இயக்குஅன்ர் உதயகுமார் இயக்கியிருந்தார். படத்திற்கு வசனம் சீமான் எழுதியிருந்தார். இப்படம் தீபாவளி ரேஸில் அதிக வசூலை பெற்று முதலிடத்தை பெற்றது.

3. ஷாஜகான்

shajakan

 விஜய்  நடிப்பில் அவருக்கு ஹிட் கொடுத்த ராசியான நிறுவனமான சூபப்ர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வந்த படம் ஷாஜகான். புதிய இயக்குனர் கே.எஸ்.ரவி இயக்கிய இப்படத்தில் ரிச்சா பலோட், விவேக், தேவன், கோவை சரளா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மணிஷர்மா இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இப்படம் சூப்பர் ஹிட் இல்லை என்றாலும் ஓரளவிற்கு வெற்றியை பெற்றது.

4. ஆண்டான் அடிமை 

மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ், சுவலட்சுமி, திவ்யா உன்னி நடிப்பில் வெளியான படம் ஆண்டான் அடிமை.இளையராஜா இந்த படம் வந்ததும் தெரியாது போனதும் தெரியாது என்பது போல அட்டர் பிளாப் ஆனது.

5. நந்தா

நடிகர் சூர்யாவின் சினிமா கேரியரை அடுத்த  கட்டத்திற்கு கொண்டு சென்ற படம் நந்தா. சேது இமாலய வெற்றிக்குபின் பாலா இயக்கிய இந்த படத்தில் லைலா, ராஜ்கிரண், கருணாஸ், சரவணன், உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இந்த படமும் ஓரளவிற்கு  வெற்றியை பெற்றது.

6.  மனதை திருடி விட்டாய்

சமீபத்தில் மறைந்த இயக்குனர் ஆர்.டி. நாராயணமூர்த்தி இயக்கத்தில் பிரபுதேவா, காயத்ரி ஜெயராம், கௌசல்யா, வடிவேலு, விவேக் உள்ளிட்ட பல்ர் நடித்து வெளிவந்த படம் மனதை திருடி விட்டாய். . இந்த படத்தில் வடிவேலு பாடும் ஆங்கில பாடலும், விவேக்கின் காமெடிகளும் இன்று வரை பிரபலம். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தில் இடம் பெற்ற மஞ்சள் காட்டு மைனாபாடல் மட்டும் சூப்பர் ஹிட். இவ்வளவு அம்சங்கள் இருந்து இப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை.

7. பார்த்தாலே பரவசம்

இயக்குனர் சிகரம் பால்சந்தரின் 100வது படம் இது. உன்னால் முடியும் தம்பி படத்திற்கு பின் கமல்ஹாசன் பாலசந்தர் இயக்கத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்துக் கொடுத்தார். மாதவன், சிம்ரன், சினேகா என அப்போதைய இளம் டாப் ஸ்டார்கள் நடித்திருந்தனர்.  ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் நன்றாகவே இருந்தது.  ஆனாலும் இப்படம் தோல்வியை தழுவியது.

8. பொன்னான நேரம்

நடிகர் ராமராஜன், மறைந்த நடிகை பிரதியுக்‌ஷா  நடித்து வெளிவந்த படம் பொன்னான நேரம். ரவிராஜா இயக்கிய இப்படத்திற்கு பிரதீப் ரவி என்ற புதுமுக இசையமைப்பாளர் இசையமைத்திருந்தார். இப்படமுக் ராமராஜனின் தோல்வி பட வரிசையில் இடம்பிடித்தது.

ஆக 2001ம் ஆண்டு தீபாவளியில் தவசி, ஷாஜகான்,  நந்தா ஆகிய படங்கள் வெற்றி பெற்றன.