முரளிக்கு தங்க வீடு கூட இல்ல.. பாய் தலயனை மட்டும்தான்!.. பிளாஷ்பேக் சொல்லும் லக்ஷ்மணன்
80களில் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் முரளி. கருப்பு நிறம், அழகாக படிந்த முடி, அழகான வெள்ளை நிற கண்கள், வசீகரமான முகம் என ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். துவக்கம் முதலே காதல் கதைகளில் நடித்து வந்தார். அதில் கதிர் இயக்கிய இதயம் படம் அவருக்கு முக்கிய படமாக அமைந்தது.
இந்த படம் வெளிவந்த பின் ‘ஒரு தலைக்காதல் என்றால் கூப்பிடு முரளியை’ என கோலிவுட் மாறிவிட்டது. அந்த அளவு ஒரு தலைக்காதலின் வலியை அவ்வளவு இயல்பாக வெளிப்படுத்தியிருந்தார் முரளி. இந்த படம் பலரின் மனதையும் பாதித்தது. அதன்பின் உன்னுடன், காலமெல்லாம் காதல் வாழ்க உள்ளிட்ட பல படங்களிலும் அப்படியே நடித்தார் முரளி.
ஒருபக்கம் காதல் கலந்த ஆக்ஷன் படங்களிலும் முரளி நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். முரளி ஹீரோ என்றால் மினிமம் கேரண்டி என்கிற நிலை உருவானது. பல இயக்குனர்களும் அவரை வைத்து படமெடுக்க ஆசைப்பட்டனர். பல ஹிட் படங்களை கொடுத்தார் முரளி. அவரின் மகன் அதர்வா சினிமாவில் நடிக்க துவங்கியிருந்த நேரத்தில் தூக்கத்திலேயே ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக முரளி உயிரிழந்தார்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய நடிகர் பாவா லக்ஷ்மணன் ‘முரளி எனக்கு ஆரம்பத்திலிருந்தே நல்ல பழக்கம். முரளி கல்யாணம் பண்ணி சென்னைக்கு வந்தபோது ஹோட்டல்லதான் தங்கி இருந்தார். அவருக்கு வீடு கூட இல்லை. அவருக்கு சரியான வாய்ப்புகள் இல்லாத சமயத்துல அந்த ஹோட்டலில் அவரை ரூமை காலி பண்ண சொல்லிட்டாங்க. அப்ப நாங்கதான் அவருக்கு ஒரு வாடகை வீடு பார்த்துக் கொடுத்தோம்.
ஒரு சாதாரண பாய் தலையனையோடு தான் அவர் வாழ்க்கையை ஆரம்பித்தார். இன்னைக்கும் அவங்க மனைவி என்ன பாத்தா ‘லட்சுமணா எப்படிடா இருக்க?’ நீங்களாம் எங்களுக்கு அவ்வளவு உதவி பண்ணீங்க.. எப்ப என்ன உதவின்னாலும் கேளுடான்னு சொல்லுவாங்க.. முரளி இருந்ததெல்லாம் எங்களுக்கு ரொம்ப ரொம்ப கஷ்டம்’ என பேசியிருக்கிறார். இந்த பாவா லக்ஷ்மணன் வடிவேலுவுடன் பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
