
Gossips
அந்த நடிகையின் கோடி கோடியான சொத்துகளுக்கு காரணமே கவுண்டமணி தானாம்.! திரைமறைவு சீக்ரெட்ஸ்..,
Published on
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஜாம்பவான்களில் முக்கியமானவர் கவுண்டமணி. இவரது காமெடி கவுண்டர்களுக்கு மயங்காதோர் தமிழ் சினிமாவில் இல்லை என்றே கூறலாம். ஹீரோ, வில்லன், சக காமெடியன் என யாராக இருந்தாலும் சகட்டுமேனிக்கு கலாய்த்து விடுவார்.
இவரது கலாய் ஃபார்முலாவை பின்பற்றி தான், தற்போது சந்தானம் யோகி பாபு என பலர் தங்களது காமெடிகளை உருவாக்கி வருகின்றனர் என்பது அவர்களது காமெடிகளை பார்த்தாலே தெரியும் . அந்தளவுக்கு இவரின் தாக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
இவரை பற்றி சினிமா உலகில், இவர் மிகவும் கறாரானவர், தனது சம்பள பணம் முழுதும் வந்தால்தான் டப்பிங் பேசுவார். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார் என பல்வேறு விமர்சனங்கள் இவர் மீது விழலாம்.
ஆனால், இவர் எவ்வளவு நல்லவர் என்பது அவருடன் பழகிய நண்பர்களுக்கு தெரியும். தன்னுடன் நடிக்கும் சக நடிகை, நடிகர்களுக்கு தன்னால் முடிந்த பல்வேறு உதவிகளை யாருக்கும் தெரியாமல் செய்வாராம். மேலும், பல்வேறு நிதி ஆலோசனைகளையும் இவர் வழங்குவாராம்.
குறிப்பாக நடிகர் செந்திலிடம் சம்பாதித்த பணத்தை வீணாக்கி விடாதே, அதனை வைத்து ஏதேனும் நிலம் வாங்கி போடு, முதலீடு செய்து வைத்து கொள், பிற்காலத்தில் உதவும் என்று யோசனை கூறுவாராம்.
இதையும் படியுங்களேன் – விக்ரம் பட கௌரவ தோற்றம்.! இணையத்தில் கெஞ்சும் சூர்யா ரசிகர்கள்.! இது தான் காரணமா.?!
அதுபோல கவுண்டமணியுடன் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த கோவை சரளாவுக்கு பல்வேறு யோசனைகளை கூறுவாராம். கவுண்டமணியின் யோசனைகளை கேட்டு கோவைசரளா அந்த காலத்திலேயே பல்வேறு முதலீடுகளை நிலங்களில் செய்துள்ளாராம். அதன் காரணமாகவே தற்போது அவருக்கு கோடிக்கணக்கான சொத்துகள் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. அது போலத்தான் நடிகர் செந்திலுக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் இருப்பதற்கு கவுண்டமணியின் ஆலோசனைகளும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
ஆரம்ப காலகட்டத்தில் பணத்திற்காக எப்படியெல்லாமோ கஷ்டப்பட்டாராம் கவுண்டமணி. அதனால் தான் காசு விஷயத்தில் கவுண்டமணி மிகவும் கறாராக இருக்கிறார் என்று சினிமா வட்டாரத்தில் விவரம் அறிந்தவர்கள் கூறுவார்கள்.
Gossip: தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகர் அரசியல் பக்கம் தாவி இருக்கிறார். இருந்தும் அவரின் குடும்ப பிரச்னை புகைந்து...
Gossip: சூப்பர்ஸ்டார் நடிகரின் அரசியல் எண்ட்ரி தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் இதை தங்களுடைய படத்துக்கு பயன்படுத்திக்கொள்ள தயாரிப்பு நிர்வாகம்...
Gossip: தமிழ் சினிமாவின் மூன்றெழுத்து நடிகர் எப்போதுமே கெத்துதான். மொத்த சினிமாத்துறைக்குமே அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரிய அளவிலான லாபம்...
Gossip: தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் மட்டுமே டிவியில் இருந்து வந்து ஜொலிக்க முடியும் போல ஹீரோயின்களுக்கு கொஞ்சம் வாய்ப்பு கம்மிதான். அந்த...
Gossip: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தொடங்கி உச்சத்துக்கு வந்திருக்கும் நடிகருக்கு சமீபகாலமாகவே நேரம் சரியில்லை. இதனால் தன்னுடைய ஃபேன் இயக்குனரை...