தமிழ் சினிமாவுல உங்களுக்கு மதிப்பே இல்ல!.. இங்க வாங்க!.. கார்த்திக் சொன்ன பிளாஷ்பேக்..
தமிழ் சினிமா ரசிகர்களால் நவரச நாயகன் என கொண்டாடப்பட்டவர் கார்த்திக். அழகானவர், திறமையான நடிகர்.. 80களில் பல இளம்பெண்கள் இவருக்கு ரசிகர்களாக இருந்தார்கள். பழம்பெறும் நடிகர் முத்துராமனின் வாரிசு என்கிற பெருமையும் இவருக்கு உண்டு. மிகவும் ஜாலியான பேர்வழி. அதேநேரம் சீரியஸ் சினிமாக்களிலும் அசத்தலாக நடிப்பார். இவரின் நடிப்பில் வெளியான அமரன், பொன்னுமணி, கிழக்கு வாசல் உள்ளிட்ட பல படங்களிலும் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்திருப்பார் கார்த்திக்.
மணிரத்னம் இயக்கிய மௌன ராகம் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் வந்து கலக்கியிருப்பார். இப்படி கோலிவுட்டில் முக்கிய நடிகராக இருந்தாலும் ஷூட்டிங் செல்வதில் கார்த்திக் சோம்பேறி என்று திரையுலகினர் சொல்வார்கள். காலை 7 மணிக்கு வர சொன்னால் மதியம் 2 மணிக்குதான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே போவார். இரவு இரண்டு மணிக்கு மேல் தூங்கி அடுத்தநாள் மதியம் ஒரு மணிக்கு எந்திரிப்பதுதான் கார்த்திக்கின் வழக்கம். இவருக்கு மதுப்பழக்கமும் உண்டு என்று சொல்வார்கள்.
இப்படி சினிமாவுக்கு சின்சியராக இல்லாமல் போனது அவரின் மார்க்கெட் சரிந்து போனது. சமீபத்தில் கூட இயக்குனர் மற்றும் நடிகர் பாரதி கண்ணன் கார்த்திக்கை பற்றி பேசிய வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில்தான் நடிகர் கார்த்திக் சில வருடங்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டி தொடர்பான வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
‘ஒரு தெலுங்கு பிரஸ்மீட்டில் ‘நீங்க ஏன் தமிழ் சினிமாவுக்கு போனீங்க?.. முதல் படம் தெலுங்கில்தானே பண்ணீங்க.. நீங்க அங்க போயிருக்கவே கூடாது.. உங்களை அவங்க மதிக்கவே இல்ல.. இங்க இருந்தா உங்க லெவலே வேற’ன்னு என் முகத்துக்கு நேரா சொன்னாங்க.. அவங்க அந்த அளவுக்கு என்ன ஏத்துக்கிட்டு இருந்தாங்க.. அவங்க தொழிலை ரசிக்க தெரிஞ்சவங்க’ என அந்த வீடியோவில் கார்த்திக் பேசி இருக்கிறார்.
