விஜய் வாங்கிய முதல் விருது!.,. கொடுத்தது யார் தெரியுமா?!.. வைரல் போட்டோ!...
சினிமாவின் மீதிருந்த ஆர்வத்தில் கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்டவர்தான் விஜய். தனது அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் இயக்குனர் என்பதால் இயல்பாகவே சினிமாவில் நடிக்கும் ஆசை விஜய்க்கு வந்தது. அவ்வப்போது அப்பாவின் ஷூட்டிங்கிற்கு போய் தூரத்திலிருந்து ஷூட்டிங் வேடிக்கை பார்த்தபோது அந்த ஆர்வம் இன்னும் அவருக்கு அதிகரித்தது. எனவே சினிமாதான் தனது கெரியர் என முடிவெடுத்தார் விஜய்.
ஆனால் அப்பா எஸ்.ஏ.சி அதை ஏற்கவில்லை. ஆனால், விஜய் அதில் பிடிவாதமாக இருந்ததால் அதற்கு சம்மதித்தார். அதேநேரம், விஜயை வைத்து அப்போது யாரும் படமெடுக்க முன் வராததால் தானே சொந்தக்காசை போட்டு நாளைய தீர்ப்பு என்கிற படத்தில் விஜயை அறிமுகம் செய்தார். தொடர்ந்து விஜயை வைத்து சில படங்களை தயாரித்தார் எஸ்.ஏ.சி.
அதன்பின் பூவே உனக்காக உள்ளிட்ட சில படங்கள் விஜய்க்கு கைகொடுக்க அப்படியே டேக்ஆப் ஆகிவிட்டார். தற்போது அவரின் 69வது திரைப்படமாக ஜனநாயகன் வெளியாகவுள்ளது.
கடந்த 30 வருடங்களில் விஜய் தனக்கென பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கியிருக்கிறார். அவருக்காக உயிரை கொடுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையில்தான் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கும் சென்றிருக்கிறார் விஜய்.
ரஜினி, கமல், விக்ரம், தனுஷ் போன்ற நடிகர்களுடன் ஒப்பிடும்போது விஜய் சிறந்த நடிகர் விருதையெல்லாம் வாங்கியது இல்லை. அதேநேரம் சில விருதுகளையும் அவர் வாங்கியிருக்கிறார்.
ஒருமுறை விகடன் சார்பாக அவருக்கு சிறந்த நடிகர் விருது கொடுக்கப்பட்ட போது ‘என்னை விட சிறந்த நடிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.. தனுஷ் இருக்கிறார்’ என்று ஓப்பனாக மேடையில் பேசினார் விஜய்.

விஜய்க்கு முதன் முதலாக அவர் அறிமுகமான நாளைய தீர்ப்பு படத்திற்காக ‘சிறந்த அறிமுக நடிகர் விருது’ கொடுக்கப்பட்டது. அந்த விருதை அப்போது பிரபல ஒளிப்பதிவாளராக இருந்த சுரேஷ் சந்திரா மேனன் விஜய்க்கு வழங்கினார். இதுதான் விஜய் வாங்கிய முதல் விருது. இந்த சுரேஷ் சந்திரா மேனன்தான் நடிகர் ரேவதியை திருமணம் செய்து கொண்டு சில வருடங்களில் விவாகரத்து பெற்றார். தற்போது இவர் தமிழ் படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.
