1. Home
  2. Throwback stories

இந்த மூஞ்சிலாம் ஹீரோவா?.. சத்யராஜ் படத்தில் நடிக்க மறுத்த சில்க் ஸ்மிதா!...

silk smitha

சில்க் ஸ்மிதா

ஆந்திராவை சேர்ந்தவர் சில்க் ஸ்மிதா. வாடியாப்பட்டி விஜயலட்சுமி என்பது இவரின் சொந்த பெயர். இவர் ஒரு வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த போது அங்கு சென்ற தமிழ் சினிமா நடிகர் வினுச் சக்கரவர்த்தி அவரின் கண்களை பார்த்துவிட்டு சினிமாவில் நடிக்க வருகிறாயா என்று கூறி அவரை அழைத்து வந்தார். இப்படித்தான் சில்க் ஸ்மிதாவின் சினிமா பயணம் தொடங்கியது.

80களில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். ரஜினி, கமல் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்திலும் சில்க் ஸ்மிதா ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனமாடுவார். சில்க் ஸ்மிதா படத்தில் இருந்தால் அந்த படம் வெற்றி பெறும் என்கிற நிலை அப்போது. அந்த அளவுக்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்தார் சில்க் ஸ்மிதா. பல படங்களில் கவர்ச்சி நடனம் ஆடினாலும் ஒருபக்கம் பிரபுவுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்திருக்கிறார். இளையராஜாவின் இசையில் இவர் நடனமாடிய எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட்தான்.

silk

தமிழ், சினிமா மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிக படங்களிலும் நடித்திருக்கிறார். 1996ம் வருடம் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டார். சில்க் ஸ்மிதாவுக்கு என பெரிய ரசிகர் கூட்டமே இருந்த. இப்போதும் இவரின் புகைப்படங்களை பலரும் ஃபேஸ்புக் போன்ற்ர சமூகவலைத்தளங்களில் பகிர்வதுண்டு. சமீபத்தில் கூட சில்க் ஸ்மிதாவின் பிறந்த்நாளை தீவிர ரசிகர் ஒருவர் கடந்த 20 வருடங்களாக கொண்டாடி வரும் செய்தி வெளியானது.

சில்க் ஸ்மிதா சத்யராஜுடன் இணைந்து ஜீவா, ஆளப்பிறந்தவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் ஜீவா படத்தில் நடிக்க அழைத்த போது ‘இந்த மூஞ்சிலாம் ஹீரோவா?.. நான் நடிக்க மாட்டேன்’ என சொல்லி நடிக்க மறுத்திருக்கிறார் சில்க் ஸ்மிதா. அதன்பின் சத்யராஜ் அவரிடம் பேசி அவரை சம்மதிக்க வைத்து அந்த படத்தில் நடிக்க வைத்தார் என சொல்லப்படுகிறது.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.