Ajith: அசிங்கமா திட்டிய தயாரிப்பாளர்!.. கண்ணீர் விட்டு அழுத அஜித்!.. ஒரு பிளாஷ்பேக்!...
அமராவதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் அஜித்குமார். அதன்பின் தொடர்ந்து சாக்லேட் பாயாக பல படங்களிலும் நடித்தார். விஜயும் ஒரு பக்கம் வளர்ந்து வர அவருக்கு டஃப் கொடுக்கும் போட்டி நடிகராக மாறினார் அஜித். இரண்டு பேருமே காதல் கலந்த ஆக்சன் படங்களில் நடித்தார்கள்.
90களில் விஜய்யின் வெற்றி சதவீதம் அதிகமாக இருந்த நிலையில் அஜித்துக்கு மிகவும் குறைவாக இருந்தது. அஜித் நடித்த பல படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது. ஒருபக்கம் கார் மற்றும் பைக் ரேஸில் கலந்து கொண்டு விபத்தில் சிக்கி அவரது உடம்பில் பல அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டதால் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து வந்தார் அஜித். அவருக்கு கடுமையான முதுகுவலியும் இருந்தது. இதனாலேயே பல பட வாய்ப்புகளை அவர் இழந்தார்.

இந்நிலையில்தான் பிரபல தயாரிப்பாளர் காஜா மொய்தின் ஊடகம் ஒன்றில் ஒரு முக்கிய தகவலை கூறியிருக்கிறார். ஆனந்த பூங்காற்று படத்தில் அஜித்தை நடிக்க வைக்க நினைத்து அவரை பார்க்கப் போனால் அங்கு அங்கு ஒரு தயாரிப்பாளர் அவரை வாடா போடாவென அசிங்கமாக திட்டிக் கொண்டிருந்தார். அஜித் எதுவும் பேசாமல் அழுது கொண்டிருந்தார். அவர் போனபின் கண்ண தொடச்சிட்டு ‘எனக்கு கொஞ்சம் கடன் இருக்கு சார்.. 22 லட்சம் கிடைக்குமா?’ என கேட்டார் அஜித். அடுத்த நாளே அவருக்கு சிங்கிள் பேமெண்ட்டாக அந்த பணத்தை கொடுத்தேன்.
ஆனால் ஷூட்டிங் துவங்கியபோது அறுவை சிகிச்சை செய்து அஜித் மருத்துவமனையில் இருந்தார். எனவே பிரசாந்தை கமிட் செய்து விட்டோம். அஜித்தை பார்ப்பதற்காக ஹாஸ்பிடலுக்கு போனேன். அவருக்கு பதிலாக பிரசாந்த் நடிக்கும் விளம்பரத்தை பேப்பர்ல காட்டி என் கைய புடிச்சு அழுதுகிட்டு ‘நான் திரும்ப வரமாட்டேன்னு நினைச்சிட்டீங்களா?.. இந்த படத்தை நான்தான் பண்ணனும்’ என சொல்லி அழுதார். அதன்பின் அவர் குணமாகும் வரை காத்திருந்து அந்த படத்தில் அவரை நடிக்க வைத்தேன்’ என சொல்லியிருக்கிறார். ஆனந்த பூங்காற்றே திரைப்படம் 1999ம் வருடம் வெளியானது. இதில், மீனா, கார்த்திக் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ராஜ்கபூர் இப்படத்தை இயக்கியிருந்தார்.
